29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
5 head lice
தலைமுடி சிகிச்சை

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எலி வால் போல இருக்கும் கூந்தலில் இரவு இஞ்சி சாறு தடவுங்க….

உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும்.

கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெப்பம் முடிஉதிர்வு பிரச்சினையை அதிகப்படுத்துகிறது.

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை பயன்படுத்தி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

முடி உதிர்வை இஞ்சி கட்டுப்படுத்தும்

இஞ்சியில் மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் அதிகம் உள்ளன. ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி சாறுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலின் மயிர்கால் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

காலையில் எழுந்ததும் ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவி விடவும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சினை முற்றிலும் நீங்கிவிடும்.

பொடுகு பிரச்சனைகளுக்கு
பொடுகு பிரச்சினைதான் முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் ஏற்படும் சருமம் சார்ந்த பிரச்சினைதான் பொடுகு தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது.

இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாற்றை தலையில் தடவும்போது நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.

தூங்கச் செல்வதற்கு முன்பு இஞ்சி சாறை தலையில் தடவிவிட்டு காலையில் ஷாம்பு கொண்டு கூந்தலை அலசிவிடலாம்.

சிறந்த ரத்த ஓட்டம் கூந்தல் ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். உலர்வான, சிக்கல் நிறைந்த கூந்தலை கொண்டவர்களும் இஞ்சியை உபயோகிக்கலாம். அது கூந்தலுக்கு மென்மையும், மிருதுவான தன்மையும் கொடுக்கும்.

கூந்தல் வலிமையடைய
கூந்தலுக்கு இயற்கையான ஹேர் கண்டிஷனராகவும் இஞ்சி செயல்படும். கூந்தலுக்கு ஜொலிப்பைத் தரும் செபம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச்செய்யும் சக்தியும் இஞ்சிக்கு இருக்கிறது.

இஞ்சியில் முடிக்கு ஊட்டமளிக்கும் லினோலிக் அமிலம் போன்ற சில கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஒரு துண்டு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, தயிரில் கலந்து கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து கூந்தலை கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால் கூந்தல் வலிமையாகும்.

Related posts

எந்த ஷாம்பூ போட்டீங்க… கண்டிஷனரா? சில்க் டைப்பா? டிரையா..

nathan

பேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்

nathan

பெண்களே முடி நீளமா வளரனும்மா? இந்த இந்திய ரகசியங்கள ஃபாலோ பண்ணுங்க…!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு வெள்ளை முடி வருவதற்கு இந்த 11 செயல்கள்தான் காரணமாம்..!

nathan

சிறந்த கூந்தலுக்கு மூலிகை ஷாம்பு

nathan

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! சுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் – தீர்வும்

nathan

உங்க தலை வழுக்கையா? ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் தெரியுமா

nathan

திராட்சை விதை எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது

nathan