காலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஏதேனும் ஒரு கலவை சாதம் செய்ய நினைத்தால், ட்ரை ஃபுரூட் புலாவ் செய்யுங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட.
சரி, இப்போது அந்த ட்ரை ஃபுரூட் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Dry Fruit Pulao For Your Kiddies
தேவையான பொருட்கள்:
அரிசி – 2 கப்
பாதாம் – 10
உலர் திராட்சை – 10
முந்திரி – 10
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பிரியாணி இலை – 1
குங்குமப்பூ – 1 சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
மற்றொரு அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின் அதில் அரிசியை கழுவி சேர்த்து 1-2 நிமிடம் வறுக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு மற்றும் குங்குமப்பூ சேர்த்து 1/2 நிமிடம் கிளறி, பின் அதில் 3 சூடேற்றிய நீரை ஊற்றி, கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதனை மூடி வைத்து, சாதம் வெந்து நீர் வற்றியப் பின் இறக்கினால், ட்ரை ஃபுரூட் புலாவ் ரெடி!!!