25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
1 1
மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? பாதவெடிப்பு வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

உலர்ந்த பாதங்கள் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு கால் வலியை அதிகமாக்கும், இது குதிகால் வலி மற்றும் இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். உங்களுக்கு பித்த பிரச்சினைகள் இருந்தால், உங்கள் பாதங்கள் அழுக்கு மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க அவை காலணிகளை அணிய வேண்டும். இது உங்கள் கால்களில் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கும்.

பாதவெடிப்பில் உள்ள டெட் செல்கள் நீங்குவதற்கான கிரீம் பயன்படுத்தி, ஸ்கிராப் மூலம் தேய்த்து நீக்கலாம். டெட்செல்கள் நீங்கிய பின் பாதவெடிப்பு போவதற்கான மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம்.

* வெளியில் சென்று வந்தவுடன் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவலாம். படுக்கச் செல்லும் முன்பும் பாதங்களைச் சுத்தம்செய்து கிரீம் தடவிக்கொள்வது பாதத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள், மிதவெப்பமான தண்ணீரில் கல்உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து, கால்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின் கால்களை ஸ்கிரப் கொண்டு தேய்த்து, டெட் செல்களை நீக்கலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலைகளைத் தேய்த்துவிடலாம். * விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சம அளவில் எடுத்து, அத்துடன் மஞ்சள் கலந்து, இரவில் கால்களில் அப்ளை செய்யலாம்.

* மெழுகுடன், சம அளவு கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்கு குழைத்துக்கொள்ளவும். அதை, குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவி, அதன்மீது லேசான துணி போட்டு பாதுகாக்கலாம். இந்த கிரீமைப் பயன்படுத்தியபடி இரவில் தூங்கப் போகும் முன் சாக்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Related posts

மூக்கு ஒழுகல் தொல்லை தாங்க முடியலையா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பித்தம் தலைக்கேறுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா?

nathan

கர்ப்ப காலத்தில் மல்லாந்து படுத்தால் ஏற்படும் பிரச்சனைகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்மையை அதிகரிக்கும் அம்மான் பச்சரிசி இலை.

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்

nathan

விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா?

nathan