30.4 C
Chennai
Wednesday, May 14, 2025
amil 1
Other News

பெண்களே தெரிஞ்சிக்கங்க குதிகால் வலி வருவதற்கான காரணங்கள்…

Courtesy: MalaiMalar தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு ‘பிளான்டார் பேசியைட்டிஸ்’ என்று பெயர்.

குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதை தடுக்க ‘பர்சா’ எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டால் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்கு குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம்.

30 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளை செய்யாமல் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்கு குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப்பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப்பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் இதற்கு உதவும்.

இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்த காலணிகள் பாதத்துக்கு சமமான அழுத்தத்தை தருவதில்லை. இவற்றை காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும். இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்கும் குதிகால் வலி வரும்.

Related posts

நடிகர் பகத் பாசில் சொத்து மதிப்பு..

nathan

ஹெலிக்கொப்டரை மீட்புபணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்- ஈரானின் செம்பிறைசங்கம்

nathan

பல கோடி மதிப்புள்ள Flat வாங்கியுள்ள கமல்ஹாசன் மகள் அக்ஷாரா

nathan

‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

nathan

பிரியா உடன் தேனிலவில் இயக்குனர் அட்லீ

nathan

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்

nathan

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்…

nathan

குழந்தை பிறக்காததால், மருமகளுக்கு விஷம்

nathan

Naomi Whittel Has a Glowing New Health Plan for Staying Fit This Summer

nathan