26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
6c7ad16
அழகு குறிப்புகள்

கொடூர சம்பவம்! காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த குழந்தையை கொன்ற தாய்!

காதலனுடன் உறவில் இருந்த நேரத்தில் அறியாமல் நுழைந்த 3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இளம் தாய்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்தக் கொடூர சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் திகதி இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரத்தில் நடந்தது.

நிக்கோலா ப்ரீஸ்ட் (Nicola Priest) எனும் 23 வயது இளம் பெண் தனது 3 வயது மகள் கெய்லி-ஜெய்டே யுடன் (Kaylee-Jayde) Solihull-ல் உள்ள Kingshurst House குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

நிக்கோலா, கால்லம் ரெட்ஃபெர்ன் (Callum Redfern) எனும் 22 வயது இளைஞனை காதலித்து வந்தார். கால்லம் பெரும்பாலும் நிக்கோலாவின் வீட்டில் இருப்பது வழக்கமாக இருந்தது.

 

இந்த நிலையில், 2020-ல் ஆகஸ்ட் 9-ஆம் திகதி நிக்கோலா தனது காதலனுடன் உறவில் இருந்தபோது, குழந்தை கெய்லி அறியாமல் அந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஆத்திரம் அடைந்த இருவரும், தங்கள் உறவுக்கு மிகவும் இடையூறாக இருந்துவரும் கெய்லியை மிகக் கடுமையாக அடித்து அங்கேயே கொலை செய்தனர். கெய்லியின் நெஞ்சிலும் வயிற்றிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் குழந்தை துடுதுடித்து இறந்துவிட்டது.bfd15

 

சம்பவத்திற்கு பிறகு ஒரு மாதம் கழித்து, நிக்கோலா தனது டிக்-டொக் பக்கத்தில் “நான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன், நான் அப்படி செய்திருக்கக்கூடாது, அதே நேரத்தில் நான் வேறு எதையாவது செய்திருக்க வேண்டும்” என நடந்தவற்றை மறைமுகமாக வெளிப்படுத்தி தனது தாயிடம் மன்னிப்பு கேட்பது போல ஒரு விடியோவை வெளியிட்டார்.

பின்னர் விடயம் வெளியே தெரியவந்ததும், பொலிஸார் நிக்கோலா மற்றும் அவரது காதலன் கால்லம் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக நடந்து வந்தது.

 

விசாரணையின் போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர். இருவரும் சேர்ந்து தான் இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்பது உறுதியானது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நிக்கோலாவுக்கு 15 ஆண்டுகள் சிறையும், அவரது காதலனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பிர்மிங்காம் கிரௌன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

முகத்தின் பொலிவைக் கெடுக்கும் கருவளையம்!…

sangika

சூப்பர் டிப்ஸ்..பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

nathan

வெளிவந்த தகவல் ! 5 பெண்களுடன் தந்தைக்கு தொடர்பு – 5 பேர் மரணத்தில் கடிதங்கள் சிக்கின…

nathan

இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க…

nathan

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

மீண்டும் கைக்கொக்கிறார்களா சமந்தா – நாக சைதன்யா

nathan

முகத்தில் தழும்புகளா?

nathan

பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது

nathan