25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ambu Dosa Bajra Dosai SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான கம்பு தோசை

Courtesy: MalaiMalar கம்பில் அதிக அளவு புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம், குறைந்த அளவு கொழுப்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்து நிறைந்த தோசை
கம்பு தோசை
தேவையான பொருட்கள் :

புளித்த தோசை மாவு – 1/2 கப்

கம்பு மாவு – 1 கப்
உப்பு – தேவைக்கு
சீரகம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
ப.மிளகாய் – 2
வெங்காயம் – 2

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்த தோசை மாவு, கம்பு மாவு, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை,சீரகம், ப.மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும். மாவு நீர்க்க இருக்க வேண்டும்.

இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும். சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும். தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஊற்ற ஆரம்பித்து நடு மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும். அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும். இதுவே இந்த தோசை ஊற்றும் முறையாகும்.

தோசை மெல்லியதாக இருக்க வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும். பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.

பொன்னிறமாக வந்தவுடன் தட்டில் எடுக்கவும்.

Related posts

பிரெட் வெஜிடபிள் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி

nathan

மணக்கும் மாலை நேர நொறுவை! – மசாலா கடலை

nathan

வெங்காய பஜ்ஜி

nathan

முந்திரி வடை

nathan

தால் கார சோமாஸி

nathan

சுவையான சத்தான பசலைக்கீரை தோசை

nathan

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan

உடனடி நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

வெங்காயம் தக்காளி தொக்கு

nathan