வயதாகும் போது நரை முடி எப்படி உருவாகிறது? மெலனின் என்னும் நிறமியின் இழப்பு காரணமாக வயது முதிர்ச்சியின் போது நரை முடி உண்டாகிறது. இயற்கையான சரும நிறம் மற்றும் தலைமுடியின் நிறம் ஆகியவற்றிற்கு இந்த நிறமி உற்பத்தி ஒரு முக்கிய காரணமாகும். உங்கள் உடலில் எந்த அளவிற்கு குறைவாக மெலனின் உள்ளதோ அந்த அளவிற்கு நிறம் குறைந்த தலைமுடி காணப்படும்.
பொதுவாக வயது முதிர்ச்சியில் மெலனின் குறைபாடு ஏற்படுவது இயற்கை. இருப்பினும், மெலனின் இழப்பிற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன. இயற்கையாக அல்லது பாரம்பரியமாக உங்கள் தலைமுடியின் இயற்கை நிறம் இழக்கப்பட்டால் அதனை மீட்டெடுப்பது மிகவும் சுலபம் அல்ல. ஆனால் நரை முடி அதிகரிக்காமல் குறைவதற்கு உங்கள் உணவு ஒரு முக்கிய பங்காற்றுகிறது.
பாரம்பரியம் காரணமாக நரை முடி உண்டானால் என்ன செய்வது?
உங்கள் தலைமுடியின் இயற்கை நிறத்திற்கு காரணம் மெலனின். பொதுவாக 30 வயதிற்கு மேல் உடலில் மெலனின் இழப்பு இயற்கையாக உண்டாகிறது. உங்கள் தலைமுடி நிறம் இழப்பதற்கான விகிதம் உங்கள் மரபணுவில் மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் பெற்றோருக்கு இளம் வயதில் நரைமுடி தோன்றியிருந்தால் உங்களுக்கும் இளம் வயதில் நரைமுடி தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
பலரும் சொல்வது போல், நரைமுடியை மாற்றி மீண்டும் கருமையாக செய்வது நடக்க முடியாத காரியம். உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் சொந்தமாக மெலனினை உற்பத்தி செய்ய முடியாது.
நரை முடிக்கு சிகிச்சை அளிக்க முடியுமா?
இயற்கையாக உண்டாகும் நரை முடியை தவிர்த்து, நரை முடி உண்டாக வேறு சில காரணங்கள் உண்டு. அந்த கரணங்கள் குறித்து இப்போது அறிந்து கொள்வோம். இவற்றை களைவதால் நரைமுடி பாதிப்பை போக்க முடியும்.
ஊட்டச்சத்து குறைபாடு
உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு சமச்சீர் உணவு தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளை உங்கள் தலைமுடி இழக்கும் போது நரைமுடி தோன்றலாம். வைட்டமின் பி 12, போலேட், காப்பர், இரும்பு போன்ற சத்துகள் குறையும் போது இவை உண்டாகிறது. இந்த வகை வைட்டமின்களை அதிகரிக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் காலப்போக்கில் உங்கள் தலைமுடி அதன் இயற்கை நிறத்தை மீட்டெடுக்கும். ஆனால் இந்த மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
ஏற்கனவே இருக்கும் உடல் நிலை பாதிப்புகள்
சில குறிப்பிட்ட ஆரோக்கிய பாதிப்புகள் காரணமாகவும் இளம் வயதில் நரை முடி உண்டாகலாம். தைராய்டு, அலோபீசியா அரேட்டா போன்றவை இதில் அடங்கும். ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாகவும் தலை முடியின் இயற்கை நிறம் இழக்கப்படலாம். இந்த நிலைகளை நிர்வகிக்கவும் தலைமுடியின் இயற்கை நிறத்தை மீட்டெடுக்கவும் முடியும்.
நரைமுடி வளர்ச்சியை தாமதப்படுத்தவும், தடுக்கவும் உதவும் சில வழிகள்:
* மனஅழுத்த ஹார்மோன்கள் மெலனின் உற்பத்தியை தாமதப்படுத்தலாம் என்பதால் மனஅழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்.
* உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* சூரிய ஒளியில் உங்கள் தலைமுடி வெளிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நரை முடியை கருமையாக்கலாம் என்று கதை அளக்கும் கட்டுக்கதைகளை நம்பக்கூடாது:
நரை முடியை கருமையாக்கலாம் என்று கதை அளக்கும் கட்டுக்கதைகளை நம்பக்கூடாது:
இயற்கையாக உண்டாகும் நரைமுடியை கருமையாக்க முடியாது. ஆனால் இன்டர்நெட்டில் பலரும் கூறும் ஒரு பொய் என்னவென்றால் இவற்றை எளிதாக சரிசெய்ய முடியும் என்பது தான். பொதுவாக நரைமுடி குறித்து கூறப்படும் கட்டுக்கதைகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம். இவை அனைத்தும் பொய் என்பதால் இதனை இனிமேல் நம்ப வேண்டாம்.
மாத்திரைகள்
மெலனின் உற்பத்தியை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது உண்மையே. பயோட்டின், ஜிங்க், செலீனியம், வைட்டமின் பி12 மற்றும் டி 3 போன்ற சில ஊட்டச்சத்து மாத்திரைகள் தலைமுடியின் இயற்கை நிறத்தை மீட்டெடுக்க உதவும் என்று பல தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் உண்மையில் மருத்துவர் இந்த ஊட்டச்சத்துகள் குறைபாட்டை உங்கள் உடலில் கண்டறிந்தால் மட்டுமே இவை வேலை புரியும். மேலும் இயற்கையாக உங்களுக்கு நரைமுடி ஏற்பட்டால் அதனை தடுக்க இந்த மாத்திரைகள் வினை புரிவதில்லை.
ஹேர் மாஸ்க்
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க், தலைமுடியை கருமையாக்கும் என்று ஒரு கருத்து உண்டு. இவை அழற்சியை குறைக்கவும், ஆன்டி-ஆக்சிடன்ட்களை அதிகரிக்கவும் பயன்படும். இதனால் உங்கள் தலைமுடி பளபளப்பாக தோன்றலாம். ஆனால் உங்கள் தலைமுடியின் இயற்கை நிறத்தை மீட்டெடுக்க முடியாது.
உருளைக்கிழங்கு தோல்
உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் ஸ்டார்ச் தலைமுடியை கருமையாக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் இந்த மாஸ்க் பயன்படுத்துவதை நிறுத்தியவுடன் தீர்வு மறைந்து விடும்.