28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
amil News Thengai Poli Coconut Poli SECVPF
இனிப்பு வகைகள்

சுவையான தேங்காய் போளி செய்வது எப்படி

தேவையானப் பொருட்கள் :

மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப்

தேங்காய்த்துருவல் – 1 கப்
வெல்லம் பொடித்தது – 1 கப்
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – சுவைக்கு
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன் வரை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை :

கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

* வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி வைத்து ஆற விடவும்.

* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.

* வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி (பூர்ணம் வெளியில் வரக்கூடாது), தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க சுட்டெடுக்கவும்.

* சுவையான தேங்காய் போளி ரெடி.

குறிப்பு :

* சாதாரணமாக மைதா மாவில் தான் செய்வார்கள். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.

* இதே போன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். மாவின் மேல் ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை போட்டு அதன் மேல் சப்பாத்திக்கட்டையால் உருட்டினால் ஒட்டாமல் வரும்.

* நெய்யுடன் இந்த தேங்காய் போளியை தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Courtesy: MalaiMalar

 

Related posts

பூந்தி, லட்டு செய்முறை, எப்படி பூந்தி லட்டு செய்வது , லட்டு செய்முறை

nathan

வேர்க்கடலை உருண்டை

nathan

கேரளா மட்டை அரிசி பால் பாயாசம்!ஆஹா பிரமாதம்

nathan

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ்

nathan

கடலை மாவு பர்பி

nathan

ஆஹா பிரமாதம்- மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

nathan

சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்….

nathan

வெல்ல பப்டி

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan