ஜோதிட,ப்படி சில ரா,சிகள் இத,னால் தங்,களின் லாபத்தி,ற்காக மற்,றவர்களை ஏமாற்,றவும், உதவு,ம் மனப்பா,ன்மை இல்லா,தவர்களாக இரு,ப்பார்கள்.
அப்,படிப்பட்ட ரா,சியினர் யா,ர் என்ப,தை தெரி,ந்து கொ,ண்டு அவர்க,ளின் ச,ற்று கவன,மாக நடந்,து கொ,ள்ள வேண்,டியது அவ,சியம். அந்த,வகையில் அ,ப்படியான ராசிக்காரர்,கள் யார் ,யார் என்,பதை தெரிந்,து கொள்,வோம்.
கும்பம்
சனிபகவானை ராசி நாதனாக கொண்ட காலசக்கரத்தில் 11வதாக இருக்கும் கும்ப ராசியினர் தேங்கி நிற்கும் தண்ணீரைப் போல மிக தெளிவாக, அமைதியாக தெரிவார்கள்.
அதாவது தங்களின் கோபம், கல் நெஞ்சத்தையும், உணர்ச்சியையும் மறைக்கும் சிறந்த கலையை கையில் கொண்டவர்கள். அதனால் இவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாதவர்கள்.
ஒருவர் தங்களின் உணர்ச்சிகள் அல்லது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால் அவர் எப்படிப்பட்டவர், அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியும்.
ஆனால் கும்ப ராசியினரோ தங்களின் எண்ண ஓட்டத்தை மற்றவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வதால் இவர்களிடம் சற்று எச்சரிக்கையாக தான் பழகவும், நடந்து கொள்ள வேண்டும். உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று நினைக்கக்கூடியவர்கள் என்பதால் இவர்களிடம் கவனம் தேவை.
விருச்சிகம்
மிகவும் ஆபத்தான ராசிகளில் விருச்சிக ராசியினர் முக்கியமானவர்கள். இவர்களின் மிகப்பெரிய பலமே இவர்களின் நினைவாற்றல் தான்.
தன்னுடன் பழகக்கூடிய ஒருவர் முன்பு எப்படி இருந்தான், என்னென்ன சொன்னார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய இவர்கள், அதை மறக்காமல் அவர்களுக்கு தேவையான நேரங்களில் பழிவாங்கப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள்.
இதுவே இவர்களின் நல்ல விஷயமாகவும் பார்க்கலாம். நீங்கள் செய்த நல்ல விஷயத்தை நினைவில் வைத்துக் கொண்டு நல்லது நினைப்பார்கள்.
இதனால் இவர்களிடம் அன்பாக, தன் முழு காதலை வெளிப்படுத்தக்கூடிய துணைக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். அதே போல சில மோசமான விஷயங்களையும் மறக்க மாட்டார்கள் என்பதால் மிகுந்த கவனத்துடன் பழகுவது நல்லது.
துலாம்
துலாம் ராசியினர் மிகவும் நல்லவர்களாகக் கருதப்பட்டாலும், உங்களுடன் ஒரு நல்ல உறவைக் கொண்டிருந்தாலும், மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும், எப்படி அவர்களை கையாள வேண்டும் என்ற வரம்புகளை கொண்டிருப்பார்கள்.
அதனால் நன்றாக பழகுகிறார்கள் என்பதால் அவர்களின் நிலைப்பாட்டிலிருந்து மாறமாட்டார்கள்.
அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே செய்ய விரும்புவர் அதனால் எப்போதும் ஆபத்தானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவர்களிடம் சற்று கோபப்பட்டாலும் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்.
மீனம்
ஜோதிடத்தில், இந்த ராசியினர் மிகவும் உன்னதமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் திறந்த மனதுடன் மக்களை நேசிக்கிறார்கள்.
சொர்க்கத்தில் இருப்பதைப் போல உணர்கின்றனர். மற்றவர்களிடமிருந்து அன்பை அதிகம் எதிர்பார்க்கக்கூடியவர்கள் மீன ராசியினர்.
இவர்கள் தங்களை யாரேனும் ஏமாற்றுகிறார்கள், அல்லது பொய்யானவர்களாகத் தெரிந்தால் அவர்களிடம் மீண்டும் பழைய படி பழகவோ, சேர்ந்து வாழ்வது மிகவும் கடினம். இவர்களுக்கு வரக்கூடிய கோபத்தை தங்களை சுற்றியுள்ளவர்கள் மீது செலுத்த தொடங்கிவிடுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினர் தந்திரக்காரர்களாக கருதப்பட்டாலும், இவர்கள் பெரிய பொய்யர்கள் கிடையாது. இவர்கள் சில விஷயங்களை மறைத்து, தங்களுக்கு உகந்தது போல, தங்களுக்கு பலன் ஏற்பட வேண்டும் என செயல்படக்கூடியவர்கள்.
மிதுன ராசி நபர்களுக்குள் இருக்கும் சிறப்பு என்னவென்றால், தன் முன் நிற்பவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களின் கண்களைப் பார்த்து அறிந்து கொள்ளும் வல்லமை மிக்கவர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தன்னுடைய மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை மற்றவர்களுக்கு துளியும் தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். எனவே இவர்கள் மிகவும் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினர் இயற்கையிலேயே மிகவும் கடுமையானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். நெருப்பு ராசியான இவர்கள் அதே போல கோபமும், கடுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியை சேர்ந்த சிலர் ஒரு விஷயத்தை மறைக்க நூறு பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். அதாவது தங்களின் காரியம் நிறைவேற எந்த ஒரு விதிமுறையையும் பின்பற்றாமல் நடக்கக்கூடியவர்கள்.
-lankasri-