29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1842a8d2 3de8 4866 80ae cb2da2c328b4 S secvpf
எடை குறைய

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி மட்டும் போதுமா?

உடற்பயிற்சி செய்வதன் மூலம், தினமும் 500 கலோரி எரித்தால் போதுமானது. தினமும் 20 நிமிடங்கள் சைக்கிளிங், நீச்சல் பயிற்சி

போன்றவற்றில் ஈடுபடலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமாக

உடற்பயிற்சி செய்வது, வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

எனவே, அளவான உடற்பயிற்சி ஆரோக்கியமானது.

நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை

கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில் உள்ள

ஒவ்வோர் இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.

உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும்

சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும்.

கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட்,

பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது.

Related posts

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தொப்பையை குறைத்து தட்டையான வயிறு வேணுமா? இதெல்லாம் மறக்காமல் சாப்பிடுங்க

nathan

சூப்பர் டிப்ஸ்! உடல் பருமனால் மனக்கவலையா? இந்த சின்ன மாற்றத்தை செய்யுங்க போதும்…

nathan

சின்ன சின்ன மருத்துவ நடைமுறைகளையும் கடைபிடித்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்!…

sangika

உங்கள் கீழ் வயிறு / பெல்லி கொழுப்பை கரைக்க உதவும் அருமையான 5 ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்

nathan

உடல் ஆரோக்கியத்திற்கும், எடையைக் குறைப்பதற்குமான சிறந்த உணவு இந்த பழம் தானாம் …..

sangika

இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு

nathan

அசிங்கமாக இருக்கும் பின்புற சதையை குறைக்க சில எளிமையான வழிமுறைகள்!சூப்பர் டிப்ஸ்..

nathan

* எடை கூட காரணங்கள்: *

nathan