26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
healthyheartfoods
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

தற்போது பலரது உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது. குறிப்பாக இக்காலத்தில் ஆண்களுக்கு தான் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் தேங்குகிறது. இதற்கு காரணம் உடலுழைப்பு இல்லாதது என்று சொல்லாம். ஆம், இன்றைய காலத்தில் உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உண்ணும் உணவில் உள்ள கொழுப்புக்கள் உடலில் தேங்கிவிடுகின்றன. இதனால் ஆண்களுக்கு விரைவில் இதய நோய் வந்துவிடுகிறது.

இதய நோய் விரைவில் வருகிறது என்ற காரணத்திற்காக, தற்போது பலரும் உணவில் எண்ணெய் சேர்ப்பதை தவிர்ப்பதுடன், இறைச்சிகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கின்றனர். ஆனால் இப்படி தவிர்த்தால் மட்டும் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்குமா என்ன? நிச்சயம் இல்லை. கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பதோடு, உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கும் ஒருசில உணவுகளையும் உணவில் சேர்த்து வர வேண்டும்.

இங்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை தவறாமல் உணவில் சேர்த்து, இதயத்தை நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்

தினம் ஒரு ஆப்பிளை உட்கொண்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையே. ஏனெனில் ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், நோயெதிர்ப்பு அழற்சியாக செயல்படுவதோடு, இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் கண்ட கண்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிடாமல், அப்போது ஆப்பிளை வாங்கி சாப்பிடுங்கள்.

பாதாம்

பாதாமில் எண்ணெய் நிறைந்திருப்பதால், பலரும் இதனை ஆரோக்கியமற்றதாக நினைப்பார்கள். ஆனால் பாதாமில் நிறைந்துள்ள எண்ணெயானது இதயத்திற்கு பாதுகாப்பை வழங்கக்கூடியவை. மேலும் பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். ஆப்பிளைப் போன்றே பாதாமிலும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் அமிகம் உள்ளது. அதிலும் தினமும் இரவில் 4-5 பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் உட்கொண்டால் மிகவும் நல்லது.

சோயா

சோயா பொருட்கள் சுவையாக இல்லாவிட்டாலும், இது இதயத்திற்கு மிகவும் நல்லது. சோயாவில் உள்ள புரோட்டீன் பக்கவாதம் வருவதைத் தடுக்கும். மேலும் இது மாட்டிறைச்சிக்கு மிகவும் சிறப்பான மாற்றுப் பொருளாக விளங்கும். இது உடலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சேர்வதைக் குறைக்கும். ஆகவே மில்க் ஷேக் அல்லது வேறு ஏதேனும் சமைக்கும் போது, அத்துடன் பால் சேர்ப்பதற்கு பதிலாக சோயா பாலை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

பெர்ரிப்பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ப்ளூபெர்ரி, மல்பெர்ரி, நெல்லிக்காய் போன்ற அனைத்திலும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இதில் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்றவையும் வளமையான அளவில் உள்ளது. ஆகவே இவற்றை அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது.

சால்மன்

மீன்களிலேயே சால்மன் மீன் மிகவும் ஆரோக்கியமான ஒன்று என்று தெரியும். ஏனெனில் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், இது இரத்தம் உறைவதைத் தடுக்கும். மேலும் வாரத்திற்கு 2 முறை மீனை உணவில் சேர்த்து வந்தால், இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மீனை க்ரில் செய்து சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது. ஆகவே மீனை எண்ணெயில் பொரித்து சாப்பிடாமல், க்ரில் செய்து சாப்பிட்டு வாருங்கள்.

தக்காளி

தக்காளியில் உள்ள லைகோபைன் என்ற பைட்டோ கெமிக்கல், கொலஸ்ட்ராலைக் குறைத்து, புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ஆண்கள் அன்றாட உணவில் தக்காளியை சேர்த்து வந்தால், அது அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் வாய்ப்பைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலும், இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். அதிலும் அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், இதய நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கோதுமை பிரட்

காலையில் கோதுமை பிரட்டை டோஸ்ட் செய்து உட்கொண்டு வந்தால், இதயத்தில் பிரச்சனை ஏற்படுவது குறையும். ஆகவே பிரட் சாப்பிட நினைப்பவர்கள், கோதுமை அல்லது நவதானிய பிரட்டை சாப்பிட்டு வாருங்கள்.

ஓட்ஸ்

உங்களின் தினத்தை ஒரு பௌல் ஓட்ஸ் கொண்டு ஆரம்பியுங்கள். ஏனெனில் ஓட்ஸில் நார்ச்சத்து, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போலேட் மற்றும் பொட்டாசியம் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இதனால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படாமல் இருக்கும்.

கைக்குத்தல் அரிசி

வெள்ளை அரிசியைக் உட்கொண்டு வருவதற்கு பதிலாக, கைக்குத்தல் அரிசியை உட்கொண்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது குறைவதோடு, இதயத்தில் அடைப்புக்கள் ஏற்படுவதும் குறையும். ஏனெனில் இதில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், இது கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

ரெட் ஒயின்

ஆல்கஹாலில் பீர் மற்றும் விஸ்கி குடிப்பதை தவிர்த்து, ஒயின் குடியுங்கள். ஏனெனில் ரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், அது இரத்த நாளங்களை பாதுகாத்து, இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

Related posts

பெற்றோர்கள் குழந்தையை வழிநடத்துவது எப்படி?

nathan

இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா? சில எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

மாணவர்களே வெற்றிக்காக உழையுங்கள்

nathan

இரண்டாவது குழந்தை கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களும் குடும்பத்தினரும் கண்டிப்பாக படியுங்கள

nathan

ஒரே வாரத்தில் தொப்பை காணாம போக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இந்த பானங்களை குடிப்பதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

42 கிராம் பாதாம் தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்

nathan

நீரிழிவு நோய் வராமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan