ஈறுகள் தான் பற்களுக்கு பாதுகாப்பு அளித்து, எலும்போடு உங்கள் பற்கள் தாங்கி நிற்கும் ஆதரவையும் அளிக்கிறது. உங்கள் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லையென்றால், நீங்கள் பற்களை இழக்கும் அபாயம் ஏற்படலாம். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஈறு வியாதிகள் என்பது உங்கள் ஈறுகளை பாதிப்பதோடு அல்லாமல், உங்கள் பற்களை தாங்கும் பிற அமைப்புகளையும் சேர்த்து பாதிக்கும்.
ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் பொதுவாக நீங்கள் பல் துளைக்காத பகுதி அல்லது சுத்தமாக இல்லாத பகுதியில் இருந்து தான் ஆரம்பிக்கும். உங்கள் ஈறுகளில் பாக்டீரியா உருவாகி, அது வலியையும் அழற்சியையும் ஏற்படுத்தும். அழற்சி அல்லது ஈறுகளில் வீக்கம் ஏற்படுவது தான் ஈறுகள் சம்பந்தமான நோய்களுக்கான முதல் எச்சரிக்கை ஆகும். மற்ற அறிகுறிகளாக இவைகளை சொல்லலாம் – ஈறு சிவத்தல், பல் துலக்கும் போது இரத்த கசிவு, ஈறுகளின் கோடு விலகுதல், தொடர்ச்சியான சுவாச துர்நாற்றம், வாய் புண்கள்.
ஈறு அழற்சிக்கு சரியாக சிகிச்சை அளிக்காவிட்டால், ஈறு பிரச்சனைகள் மோசமடையும். தொற்றுக்களும் அழற்சியும் பற்களை தாங்கும் திசுக்கள் வரை மிக ஆழமாக ஊடுருவும். பற்களை விட்டு ஈறுகள் விலக தொடங்கி விடும். இதனால் அதிக பாக்டீரியாக்கள் உள்ளே நுழையும். இந்த கட்டத்தில் பீரியடான்டிடிஸ் என்ற ஈறு நோய் ஏற்படும். இது பற்களை தாங்கும் திசுக்களையும் எலும்புகளையும் உடையச் செய்யும். எலும்புகளை இழந்தால், பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக லூசாகி விடும். கடைசியில் பற்கள் விழுந்து விடும் நிலை ஏற்படும். வாய் ஆரோக்கியம் உங்கள் ஒட்டு மொத்த உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஈறு நோய்களை கொண்டுள்ளவர்களுக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் இடர்பாடு அதிகமாக உள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.
ஆரோக்கியமான ஈறுகளை பராமரித்து கொள்வது வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது. ஈறு தொற்றுக்களை இயற்கையாக குணப்படுத்துவது எப்படி? ஈறு தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க சில இயற்கையான வழிகள் உள்ளது. ஆம், பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான சில வீட்டு சிகிச்சைகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.
பேக்கிங் சோடா
ஈறு தொற்றுக்களை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். ஈறுகளில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கு இது நேரடியாக நிவாரணம் அளிக்காவிட்டாலும், வாயில் உள்ள அமிலத்தை இது சமன் செய்யும். இதனால் பற்கள் சொத்தையாகும் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் குறையும். வெதுவெதுப்பான நீர் ஒரு கப்பை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளுங்கள். பற்களை துலக்குவதற்கு முன், இந்த கலவையில் உங்கள் டூத் பிரஷை முக்கி விட்டு, அதன் பின் அதில் பேஸ்ட்டை தடவுங்கள்.
தேநீர் பைகள்
பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது ஊறிய தேநீர் பைகளில் உள்ள டானிக் அமிலம், ஈறு தொற்றுக்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படும். கொதிக்கும் நீரில் தேநீர் பையை சிறிது நேரம் முக்கிய பிறகு, அதனை சிறிது நேரம் ஆற விடுங்கள். பின் அந்த பையை பாதிக்கப்பட்ட ஈறுகளின் மீது 5 நிமிடங்கள் போல ஒத்தடம் கொடுங்கள். ஈறு தொற்றுக்களை தடுப்பதற்கான எளிய வீட்டு சிகிச்சை இதுவாகும்.
தேன்
ஈறு தொற்றுக்களை இயற்கையான வழியில் போக்க தேனும் உதவுகிறது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் கிருமிநாசினி குணங்கள் அடங்கியிருப்பதால், ஈறு தொற்றுக்களை எதிர்த்து இது சிறந்து செயல்படும். உங்கள் பற்களை துலக்கிய பிறகு, பாதிப்படைந்துள்ள ஈறுகளில் கொஞ்சம் தேனை தடவுங்கள். பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த வாய் பகுதிகளில் தைரியமாக தேனை தடவலாம். இருப்பினும் அளவுக்கு அதிகமாக தடவாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கிரான்பெர்ரி ஜூஸ்
இனிப்பு சேர்க்கப்படாத கிரான்பெர்ரி ஜூஸை பருகினால், பற்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்வது தடுக்கப்பட்டு, ஈறு தொற்றுக்கள் குறையும்.
எலுமிச்சை
எலுமிச்சை ஜூஸில் அழற்சி எதிர்ப்பி குணங்கள் உள்ளதால் ஈறு தொற்று சிகிச்சைக்கு இதனை பயன்படுத்தலாம். மேலும், எலுமிச்சையில் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இது ஈறுகளை தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும். எலுமிச்சையில் இருந்து சாறை பிழிந்து அதனுடன் கொஞ்சம் உப்பை சேர்த்துக் கொள்ளவும். அதனை நன்றாக கலந்து ஒரு பேஸ்ட்டை போல் உருவாக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் பற்களில் தடவி விட்டு, சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் வாயை நன்றாக கொப்பளித்து விடுங்கள்.
உப்பு தண்ணீர்
வாயை உப்பு தண்ணீரை கொண்டு கொப்பளித்தால், ஈறு தொற்றுக்களால் ஏற்பட்டுள்ள வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரை ஒரு கிளாசில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 டீஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளவும். இதனை தினமும் இரண்டு முறை கொப்பளித்து வந்தால், வலி மெல்ல குறையும்.
கிராம்பு அல்லது லவங்கப்பட்டை எண்ணெய்
கிராம்பு மற்றும் லவங்கப்பட்டை எண்ணெய், என இரண்டுமே ஈறு தொற்றுகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கும். ஈறுகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றை தடவிக் கொளல்லாம். கிராம்பு எண்ணெய் மற்றும் பெராக்சைட் கலவையால் செய்யப்பட பேஸ்ட்டை தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பை வாயில் போட்டு மென்றாலும் கூட வலி குறையும். வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் லவங்கப்பட்டையை சேர்த்து குடித்தாலும் ஈறு தொற்றுக்களுக்கு நிவாரணமாய் அமையும்.
பூண்டு
ஈறு தொற்றுக்களை இயற்கையான வழியில் குணப்படுத்தும் வழிகளில் ஒன்று தான் பூண்டு. பூண்டு ஒரு இயற்கையான வலி நிவாரணியாகும். ஓரளவிற்கு இது வலியை குறைக்கும். நசுக்கிய பூண்டுடன், கொஞ்சம் உப்பை சேர்த்து, அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும்.
மிளகு
ஈறு தொற்றுக்களை இயற்கையான முறையில் குணப்படுத்த மற்றொரு வழி தான் மிளகு. மிளகுடன் கிராம்பு எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தினால் ஈறு தொற்றுகளுக்கு நிவாரணம் கிடைக்கும். ஈறு தொற்றுக்களினால் வீக்கம் ஏற்பட்டால், மிளகு எண்ணெய்யை தடவவும். இது வீக்கத்தை குறைப்பதோடு ஈறு வலியையும் குறைக்கும்.
ஐஸ் பேக்
ஐஸ் பேக் வைத்தால் வீக்கமும் வலியும் வற்றும். அதற்கு காரணம் ஐஸ் பேக் என்பது ஒரு அழற்சி எதிர்ப்பியாகும்.
ஹைட்ரஜென் பெராக்சைடு
ஈறு தொற்றுக்களுக்கு எதிராக போராட ஹைட்ரஜென் பெராக்சைடு (3% செறிவு) பொடியை பயன்படுத்தலாம். ½ டீஸ்பூன் பெராக்சைடு பொடியுடன் ½ கப் தன்நீரியா கலந்து கொள்ளவும். அதை கொண்டு வாயை நன்றாக கொப்பளிக்கவும்.
கற்றாழை
கற்றாழையில் பல வித உடல் நல பயன்கள் உள்ளது. ஈறு தொற்றுக்களை குணப்படுத்தும் தன்மையும் அதில் ஒன்றாகும். கத்தாழை ஜெல்லை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். ஈறு தொற்றுக்களை குணப்படுத்த கற்றாழை ஜூஸையும் கூட பருகலாம்.
ஆப்பிள்
ஈறு தொற்றுக்களை குணப்படுத்த ஆப்பிள் உண்ணுவதும் சிறந்த வழியாக உள்ளது என வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதற்கு காரணம் ஆப்பிளில் சில ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் ஈறுகளை வலுவாகவும் திடமாகவும் மாற்றும். அதனால் உங்கள் அன்றாட உணவுடன் ஆப்பிள் பழத்தையும் சேர்த்து உண்ணுங்கள். இது உடல்நலத்தோடு ஈறு ஆரோக்கியத்திற்கும் உதவிடும்.
யூகலிப்டஸ்
யூகலிப்டஸ் இலைகள் அல்லது பேஸ்ட்டை ஈறுகளில் தடவினால், ஈறு தொற்றுக்களினால் ஏற்பட்டுள்ள வலி நீங்கும். வலியை போக்கும் குணத்தை யூகலிப்டஸ் கொண்டுள்ளதாலேயே இது சாத்தியமாகிறது. இதை பயன்படுத்தினால் ஈறுகளில் ஏற்பட்டுள்ள வீக்கமும் வற்றும்.
துளசி
தினமும் துளசி தேநீரை மூன்று முறை குடித்து வந்தால், ஈறு தொற்றுக்கள் குணமாகும். வீக்கத்தை குறைத்து, தொற்றுக்களை அழிக்கும்.
டீ ட்ரீ எண்ணெய்
டீ ட்ரீ எண்ணெயில் டெர்பெனாயிட்ஸ் என இயற்கையான ஆர்கானிக் ரசாயனம் அடங்கியுள்ளது. இது கிருமிநாசினி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்களை கொண்டுள்ளது. ஈறு தொற்று சிகிச்சைக்கு இது மிகவும் உதவிடும். பல் துலக்கும் முன்பு, ஒரு சொட்டு டீ ட்ரீ எண்ணெய்யை உங்கள் டூத் பிரஷில் தடவிடுங்கள். எண்ணெய்யை விழுங்கி விடாதீர்கள். அதனை கொப்பளிக்க மட்டுமே செய்ய வேண்டும்.
சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தி டீயை மௌத் வாஷாக பயன்படுத்தலாம் அல்லது குடிக்கவும் செய்யலாம். ஈறு தொற்றுக்களுக்கு இதுவும் நிவாரணம் அளிக்கும். அழற்சியை குறைத்து, குணமாக்கும் செயல்முறையையும் துரிதப்படுத்தும்.