Other News

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை குறைக்க நினைப்போர் தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்!!!

நீங்கள் உடல் எடையைக் குறைக்க உண்ணும் உணவுகளில் அதிக கவனம் செலுத்துபவரா? அதிலும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொள்பவரா? அப்படியெனில் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் ஆரோக்கியமான உணவுகள் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகளும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். இதற்கு அதில் உள்ள நிறைந்துள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் தான் காரணம்.

ஆகவே நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அதுவே நீங்கள் உடல் எடையை அதிகரிக்க ஆசைப்பட்டால், இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

அவகேடோ

அவகேடோ பழத்தில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் இருக்கிறது என்று உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் இதில் கொழுப்பு அதிகம் இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் சாப்பிட்டால் எடை அதிகரிக்கத் தான் செய்யும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் 55 கிராம் கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கிறது. ஆகவே அன்றாடம் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடை தான் அதிகரிக்கும்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின் இதயத்திற்கு நல்லது தான். ஆனால் இதனை அதிகம் குடித்தால், உடல் எடை தான் அதிகமாகும்.

நட்ஸ்

நட்ஸில் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, 133 கலோரிகளும் இருப்பதால், எடையைக் குறைப்போருக்கு இது நல்லதல்ல.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

உலர் பழங்கள்

ஒரு கப் பழங்களை விட அதிகமாக ஒரு கப் உலர் பழத்தில் 5-8 மடங்கு அதிகமான அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது. ஆகவே ஸ்நாக்ஸாக இதனை எடுத்துக் கொண்டால் உடல் எடை தான் அதிகமாகும்.

சாக்லெட்

சாக்லெட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது தான். ஆனால் அது டார்க் சாக்லெட்டே தவிர மில்க் சாக்லெட் அல்ல.

ஸ்மூத்தி

ஜூஸ்களில் ஒரு வகையான ஸ்மூத்தியை குடித்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது. ஸ்மூத்தியில் எவ்வளவு தான் ஊட்டச்சத்துக்களும், புரோட்டீன்களும் அதிகம் இருந்தாலும், அதை விட அதிகமாக கலோரிகள் இருப்பதால், இதனை குடித்தால் உடல் எடை தான் அதிகரிக்கும்.

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் மூளை செல்களை பாதுகாக்கலாம். ஆனால் ஒரு பெரிய கப் காபியில் 300-க்கும் அதிகமாக கலோரிகள் நிறைந்துள்ளது. ஆகவே இதனை குடித்தால் உடல் எடை தான் அதிகரிக்கும்.

தயிர்

தயிரில் கால்சியம் அதிக அளவில் இருந்தாலும், அதற்கு சரிசமமாக கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை டயட்டில் சேர்த்தால் எடை தான் அதிகரிக்கும்.

சாண்ட்விச்

எடையைக் குறைக்க நினைப்போர் டயட்டில் சாண்ட்விச்சை தான் அதிகம் சேர்ப்பார்கள். ஆனால் சாண்ட்விச்சில் 210 கலோரிகள், 5 கிராம் கொழுப்பு மற்றும் 440 மில்லிகிராம் வயிற்றை நிரம்பச் செய்யும் சோடியம் இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button