23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
28 1422435239 s2
மருத்துவ குறிப்பு

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்!!!

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால், பன்றி காய்ச்சல் பற்றியும் அதன் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகும். சமீப காலமாக இந்த நோய் உலகத்தில் உள்ள பல பகுதிகளிலும் பரவி வருகிறது. முதன் முதலில் மெக்சிகோ நகரில் தான் இந்த கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. பின் அங்கிருந்து உலகத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு இது பரவ தொடங்கியது. இன்றைய தேதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுள்ளது. இந்த நிலையை எண்ணி கவலைப்படுவதற்கு பதில் அதை எப்படி தடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உடல்நல வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

பன்றி காய்ச்சல் என்ற இந்த கிருமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீங்கள் சென்றிருந்தால், இந்த நோய் உங்களை தாக்கும் வாய்ப்பு அதிகரிக்க கூடும். மிகப்பெரிய மக்கள் கூட்டத்தில் நீங்கள் இருக்கும் போது இந்த கிருமி மிக சுலபமாக பரவக் கூடும். நம்மில் பலரும் இந்த நோய் என்ன என்பதை பற்றியும், அது எப்படி பரவுகிறது என்பதை பற்றியும் எண்ணி வியப்படைவோம். பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? அதனை எப்படி தடுப்பது? பன்றி காய்ச்சல் பற்றிய அவ்வகையான தகவல்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

இன்ஃப்ளூயென்ஸா ஏ கிருமியால் உருவாகும் சுவாச தொற்று தான் பன்றி காய்ச்சல். பொதுவாக இவ்வகையான கிருமிகள் பன்றிகளிடையே தான் பரவும். ஆனால் மனிதர்களிடமும் இது பரவும்.

இது ஒரு தொற்று நோயாகும்

இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும். இந்த தொற்று நோய் சுற்று வட்டாரத்தில் உள்ள மற்றவர்களையும் மிக வேகமாக தாக்கும். இது நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும்.

அது எப்படி பரவும்?
இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர் தும்மினால் இந்த நோய் பரவக்கூடும் என தற்போது விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாம் தும்மினாலோ அல்லது இருமல் எடுத்தாலோ நம் எச்சிலில் உள்ள கிருமிகள் நம் அருகில் உள்ளவர்களிடம் வேகமாக பரவும். அசுத்தமான மேற்பரப்பை தொடும் போதும் கூட இது பரவக்கூடும்.

இது ஆபத்தானதா?
இந்தியா உட்பட சில நாடுகளில், இந்த நோயால் மரணம் நேர்ந்துள்ளது பதியப்பட்டுள்ளது. அதனால், முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால், இது உயிருக்கு ஆபத்தாய் முடியும் நோயாக மாறி விடும்.

பன்றி காய்ச்சலின் அறிகுறிகள்
இருமல், காய்ச்சல், தொண்டை புண், வலிகள், சோர்வு மற்றும் தலை வலி ஆகியவைகளே பன்றி காய்ச்சலின் அறிகுறிகள். சில நேரங்களில் வாந்தியும் வயிற்று போக்கும் கூட ஏற்படும்.

இதனை தடுப்பது எப்படி?
உங்கள் மூக்கு மற்றும் வாயை ஒரு துணியை கொண்டு மூடிக் கொள்வது மிகவும் முக்கியமாகும். பாதிக்கப்பட்ட சில மேற்பரப்புகளை தொடும் போது, உங்கள் கைகளை நன்றாக கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்த வரை இந்த கிருமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கி பழகாதீர்கள்.

முகமூடி உபயோகப்படுமா?
முகமூடி பயன்படுத்தினால் பன்றி காய்ச்சலை தடுக்கலாம் என நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் பொது இடங்களுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தவுடன், கைகளை கழுவுவது மிகவும் முக்கியமாகும்.

மருந்துகள் உதவுமா?
ஆம், பன்றி காய்ச்சல் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் முக்கியமான பங்கினை மருந்துகள் வகிக்கிறது. இந்த அறிகுறிகள் அடங்கும் போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது சுலபமாகும்.

பன்றி காய்ச்சலுக்கு தடுப்பூசி உள்ளதா?
இல்லை, பன்றி காய்ச்சல் வராமல் இருக்க தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் இதற்கான தடுப்பூசியை வரும் காலங்களில் கண்டுப்பிடித்து விடுவோம் என உடல்நல வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பன்றிறைச்சி உண்ணுவது ஆபத்தா?

பன்றிறைச்சி உண்ணுவதால் பன்றி காய்ச்சல் ஏற்படாது தான். என்றாலும் கூட இறைச்சியை நன்றாக கழுவுவதை உறுதி செய்து கொள்வது முக்கியமாகும். அதேப்போல் பிற சிக்கல்களை தடுக்க சில முன்னெச்சரிக்கைகளை எடுப்பதும் அவசியம்.

பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?

முதலில், ஒரு மருத்துவரை கலந்தாலோசியுங்கள். பின் உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் இதனால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் வேலைக்கு செல்வதையும் தவிர்க்கவும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உண்ணவும். சீக்கிரமே நிலைமை சரியாகி விடும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்ன?
சுவாச கோளாறு, தண்ணீர் குடிக்க முடியாமல் போதல், நீல நிற சருமம் மற்றும் காய்ச்சல் போன்றவைகளே குழந்தைகளிடம் காணக்கூடிய பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

பெரியவர்களிடம்….
வாந்தி, குழப்பம், மயக்கம், வயிற்று வலி மற்றும் சுவாச கோளாறுகள் போன்றவைகளே பெரியவர்களிடம் காணக்கூடிய பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

தேவையான நடவடிக்கைகள்
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எப்போதும் கையோடு வைத்துக் கொள்ளுங்கள். பன்றி காய்ச்சல் போகும் வரை, நோயால் பாதிக்கப்பட்டவர் முழு ஓய்வை பெற வேண்டும்.

வீட்டு சிகிச்சைகள் உள்ளதா?
சிகிச்சைக்கு உடனே மருத்துவமனைக்கு செல்வது மிக முக்கியமாகும். பன்றி காய்ச்சலை வீட்டில் சுலபமாக குணப்படுத்த முடியாததே அதற்கு காரணமாகும். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்?

Related posts

உயர் இரத்த அழுத்தம் இருந்தா இந்த உணவுகளை சாப்பிடாதீங்க..

nathan

விவாகரத்துக்கு முன்பும்.. பின்பும்..

nathan

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்கள் தவறாமல் எடுக்க வேண்டிய 6 பரிசோதனைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தூக்கமின்மையால் வரும் பிரச்சினைகள் தெரியுமா?

nathan

காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

தெரிஞ்சிக்கங்க…வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதனால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

பெண்கள் எந்த வயதில் உள்ளாடை (பிரா)அணியத் தொடங்கவேண்டும்

nathan

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருதாணி!

nathan

30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

nathan