26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
pimple 28 1485583136
முகப் பராமரிப்பு

பெண்களே முகத்துல பிம்பிள் அதிகமா வருதா? அப்ப இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

கொரோனா பரவ ஆரம்பித்த பின் பலரும் அழகு நிலையங்களுக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். மாறாக வீட்டிலேயே சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சருமத்திற்குப் பராமரிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரது அழகைக் கெடுக்கும் வகையில் வரக்கூடிய ஒரு சரும பிரச்சனை தான் பிம்பிள். இந்த பிம்பிள் ஒருவருக்கு அதிக மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, எண்ணெய் பசை சருமம் போன்ற பலவற்றால் வரலாம்.

சிலருக்கு பிம்பிளானது கடுமையான வலியை உண்டாக்கக்கூடியதாக இருக்கும். இப்படி அழகை கெடுத்து, வலியைத் தரும் பிம்பிளைப் போக்க பல நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் உள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போட்டு வந்தால், பிம்பிள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இப்போது முகத்தில் இருக்கும் பிம்பிளைப் போக்க உதவும் சில எளிமையான ஃபேஸ் பேக்குளைக் காண்போம்.

 

வேப்பிலை ஃபேஸ் பேக்

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை இரண்டுமே பிம்பிளை சரிசெய்ய தேவையாவை ஆகும். அதற்கு சிறிது வேப்பிலை பொடி அல்லது நற்பதமான வேப்பிலையுடன், ரோஸ் வாட்டர், தயிர், எலுமிச்சை சாறு, தேன், க்ரீன் டீ இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். அதுவும் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் முழுவதும் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பிம்பிள் வருவதை தடுத்திடலாம்.

மஞ்சள் ஃபேஸ் பேக்

மஞ்சள் சருமத்தில் மாயங்களைப் புரியக்கூடியவை. அத்தகைய மஞ்சள் தூளை தயிர் அல்லது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி, முகம் பொலிவோடும் சுத்தமாகவும் காணப்படும்.

தயிர் மற்றும் முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி ஒரு வகையான களிமண். இதில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இது பிம்பிளைப் போக்க வல்லது. அதற்கு சிறிது முல்தானி மெட்டி பொடியை ஒரு பௌலில் எடுத்து, தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். ன் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் பிம்பிள் விரைவில் மறைவதோடு, சரும நிறமும் மேம்பட்டு காணப்படும்.

பேக்கிங் சோடா மற்றும் முட்டை வெள்ளைக்கரு

பேக்கிங் சோடா மற்றும் முட்டை வெள்ளைக்கரு இரண்டுமே எண்ணெய் பசை சருமத்தினருக்கும், முகப்பரு அதிகம் வருபவர்களும் ஏற்ற பொருட்கள். இரண்டுமே சருமத்துளைகளை சுருக்கும் பண்புகளைக் கொண்டவை. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதில் பேக்கிங் சோடா பிம்பிளைப் போக்கும் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகளைப் போக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

இது மிகவும் ஈஸியான மற்றும் சிறப்பான பிம்பிளைப் போக்கும் ஃபேஸ் பேக். அதற்கு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் கழுவி துடைத்துவிட்டு, பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் இதில் உள்ள எலுமிச்சை பிம்பிளை சுருங்கச் செய்யும். அதே சமயம் தேன் சருமத்திற்கு ஊட்டமளித்து, பிம்பிளால் ஏற்படும் தழும்புகளைப் போக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் பிம்பிளை மாயமாய் மறையச் செய்யக்கூடியவை. அதற்கு சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவில் நீருடன் கலந்து, பிம்பிள் உள்ள இடத்தில் தடவி காய வைக்க வேண்டும். சிறப்பான பலனைப் பெற நினைப்பவர்கள், ஆப்பிள் சீடர் வினிகருடன் முல்தானி மெட்டி, மஞ்சள் தூள் அல்லது வேப்பிலை பொடி என ஏதாவது ஒன்றை சேர்த்து பயன்படுத்தலாம்.

Related posts

இதோ எளிய நிவாரணம் முக‌ப்பரு மறைய ‌மிளகு

nathan

பெண்களுக்கு முகத்தில் உள்ள அனைத்து முடிகளும் நிரந்தரமாக மறைந்துவிடும் !

nathan

முகம் சிவப்பு நிறம் பெற தினமும் இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

முகத்தில் உள்ள முடிகளை நீக்க

nathan

முகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்!….

nathan

அடர்த்தியான புருவம் கிடைக்க இந்த வழிகளை உபயோகிச்சு பாருங்க!!

nathan

ஸ்கின் டானிக்

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ ஸ்க்ரப்..!!

nathan