24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 ectopic1
மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! கருக்குழாய் கருத்தரிப்பு, கருக்குழாயில் உண்டாகும் பாதிப்பு,

பெரும்பாலான கருக்குழாய் கருத்தரிப்புகளில் கருவானது ஃபாலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத் தொடங்குகிறது.

சில வேளைகளில் கருப்பை வாய், அடிவயிறு அல்லது கருப்பையிலும் வளரும்.

இது ஒரு கவலைக்குரிய ஒரு நிலை என்பதோடு கர்ப்பத்தின் ஒவ்வொரு நாளும் இது வலி, இரத்தப் போக்கு அல்லது வெடிப்புகளை ஏற்படும் வாய்ப்புகளை உருவாக்கி சில சூழ்நிலைகளில் உடைப்பு அல்லது மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருக்குழாய் கருத்தரிப்பிற்கு பெரும்பாலான காரணங்கள்:
கருக்குழாய் கருத்தரிப்பிற்கு பெரும்பாலான காரணங்கள்:
முந்தைய குடல்வால் பிரச்சனை (அப்பண்டிசைடிஸ்)

பெண்ணுறுப்பில் முன்பிருந்த தொற்று

மலட்டுத் தன்மை

சேதமடைந்த கருக்குழாயில் ஏற்படும் அடைப்பு மற்றும் அதானல் கருப்பைக்குள் முட்டைகள் செலவது தடுக்கப்படுவது

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதி

பின்வருபவை கருக்குழாய் பற்றிய பத்து முக்கியமான உண்மைகள்…

உண்மை – 1 :

1. நூறில் ஒரு கருத்தரித்தலாவது இந்த கருக்குழாய் கருத்தரிப்பு பிரச்சனையாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் கவலை தரும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 40 முதல் 50 பெண்கள் இதனால் இறந்தும் கூடப் போகிறார்கள் என்பதுதான்.

உண்மை – 2 :

2001 ஆண்டு பெறப்பட்ட உண்மைத் தகவல்களின் படி, தாய்மையின் போது ஏற்படும் மரணங்களில் மிக முக்கிய காரணமாக தரமற்ற கவனிப்பும் இந்த கருக்குழாய் கருத்தரிப்பு சரியாக கண்டறியப்படாததும் ஆகும்.

உண்மை – 3 :

இங்கிலாந்தில் ஒரு வருடத்தில் பிரமிக்கத்தக்க அளவிற்கு இருபதாயிரம் பெண்கள் இந்தக் கருக்குழாய் கருத்தரித்தல் பிரச்சனையால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் அதை சரியாகக் கண்டறியாவிட்டால் அறுவை சிகிச்சையின் விளைவாக ஏற்படும் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கலாம். இது முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு பிரச்சனையாகும்.

உண்மை – 4 :

கருக்குழாய் கருத்தரிப்பு பிரச்சனையில் 95 சதவிகிதம் ஃபாலோப்பியன் டியுப் அல்லது கருக்குழாயில் நிகழ்வதும், 1.5% அடிவயிற்றிலும், 0.5% ஓவரி எனப்படும் கருப்பை பாதையிலும் மற்ற 0.03 சதவிகிதம் கருப்பை வாயிலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

உண்மை – 5 :

1970 ஆண்டு முதல் இந்த கருக்குழாய் கருத்தரிப்பு மூலம் ஏற்படும் இறப்புகளின் அளவு பெரிதளவு குறைந்துள்ளது. இது இந்த பிரச்சனையைக் கண்டறிவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை உணர்த்துகிறது..

உண்மை – 6 :

குழந்தைப் பெறும் வயதினையும் சூழ்நிலையையும் அடைந்த பெண்கள் இது தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

எனவே இதற்கான அறிகுறிகள் மற்றும் என்ன என்பதை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

உண்மை – 7 :

அசாதாரண இரத்தப் போக்கு, அடிவயிற்று வலி, கழிவுமண்டலப் பிரச்சனைகள், தலைசுற்றல் அல்லது மயக்க உணர்வு அல்லது மயங்கி விழுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்

உண்மை – 8 :

மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலோ அல்லது நீங்கள் இந்த கருக்குழாய் கருத்தரிப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தாலோ உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

உங்கள் கருத்தரிப்பு அதில் ஊர்ஜிதம் செய்யப்பட்டு உங்கள் அல்ட்ரா சவுன்ட் சோதனையில் கருப்பை வெறுமையாக இருந்தால் அது நீங்கள் கருக்குழாய் கருத்தரிப்பு பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

அவ்வாறாக அது கண்டறியப்பட்டால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் இரத்தத்தில் பீடா-எச்சிஜி அளவை சோதனை செய்யவேண்டியிருக்கும். லாப்ரோஸ்கோபி மூலமும் இந்த சோதனையை செய்யலாம்.

உண்மை – 9 :

இந்தப் பிரச்சனையை குழாய் வெடிக்கும் முன்பாகவே கண்டறிந்தால் மருந்தின் மூலமோ அல்லது குறுந்துளை அறுவை சிகிச்சை மூலமோ (கீ ஹோல் சர்ஜரி) செய்ய முடியும். இதனால் நீங்கள் விரைவில் குணமடையவும் எதிர்காலத்தில் மீண்டும் கருவுரும் வாய்ப்பை அதிகரிக்கவும் முடியும்.

உண்மை – 10 :

உங்களுக்கு இந்த கருக்குழாயில் கருத்தரித்தல் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டால் அதனை மேற்கூறிய சிகிச்சை முறைகளில் கலைத்துவிடுவது மிகவும் முக்கியம்.

வழக்கமாக அறுவை சிகிச்சையை விட மருந்து மூலம் செய்யப்படும் சிகிச்சை ஆபத்துக்கள் குறைந்தது என்பதால் அது சரியான தேர்வாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலைகளில் மருந்துகளைத் தவிர அறுவை சிகிச்சையும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.

இது போன்ற கருக்கலைப்பிற்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்க நீங்கள் குறைந்தது ஆறு மாதங்கள் இடைவெளி கொடுத்து காத்திருக்க வேண்டியது அவசியம்.

Related posts

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்……

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றம்.. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் சந்திக்கும் அபாயம் என்ன தெரியுமா?

nathan

ஜாக்கிரதை! நுரை நுரையாக சிறுநீர் கழிக்கிறீர்களா?

nathan

இந்த காரணத்துனால கூட நீங்க கர்ப்பம் ஆகமா இருக்கலாமாம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மாதவிடாய் கால அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிந்துகொள்வோமா?

nathan

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இத உணவில் அதிகமா சேர்த்துக்கிட்டா மாரடைப்பு வர வாய்ப்பிருக்காம்!

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல்

nathan