26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
a9e360f701444295
மருத்துவ குறிப்பு

சர்க்கரை நோயாளிகள் புண் விரைவில் ஆற வேண்டுமா? சூப்பரா பலன் தரும்!!

சர்க்கரை நோய் புண்கள் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அது பெரும்பாலோனோருக்கு கால்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் கால்விரல்கள் அல்லது கால்களையே எடுக்கக்கூடிய கட்டாயத்திற்கு இந்த காயங்கள் கொண்டுபோய்விடும்.

இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், கிருமி பெருகவும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.

அந்தவகையில் தற்போது இப்படி ஏற்படும் கால் புண்ணில் இருந்து விடுதலை பெற என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்.

டிப்ஸ் 1

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண் ஆற ஆவாரம்பூ இலை மிக சிறந்த மருந்தாக அமைந்துள்ளது. அதாவது நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ஆவாரம்பூ இலை பொடியை வாங்கி கொள்ளுங்கள்.

அவற்றை ஒரு மேஜை கரண்டி நல்லெண்ணெயில் ஒரு ஸ்பூன் ஆவாரம்பூ இலையின் பொடியை சேர்த்து அடுப்பில் நன்றாக சூடுபடுத்தவும். பின் அவற்றை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.

பின் இந்த கலவையை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.

பின் ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சர்க்கரை நோய் புண்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.

டிப்ஸ் 2

நீர்முள்ளி செடியின் இலை மற்றும் விதையினை பறித்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து கொள்ளவும். இவற்றை ஒரு காடன் துணியில் வைத்து நன்றாக மடித்து கொள்ளவும்.

புண்களினால் பாதிக்கப்பட்ட இடத்தை வெந்நீரால் சுத்தமாக கழுவி, சுத்தமாக துடைத்து கொள்ளவும். பின் மடித்து வைத்து காட்டன் துணியை புண்களின் மீது வைத்து நன்றாக கட்டவும். பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்கவும்.

இந்த முறையை தொடர்ந்து செய்து வர சர்க்கரை நோய் புண்கள் விரைவில் ஆறிவிடும்.

 

Related posts

மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய 30 விஷயங்கள் :-

nathan

உங்களுக்கு தோலில் இந்த மாதிரி அறிகுறி இருக்கா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

காலை நேர தாம்பத்தியம் புத்துணர்ச்சி தரும்

nathan

வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?

nathan

அலர்ஜியின் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

nathan

இளம் வயதில் மெனோபாஸ் வர காரணங்கள்

nathan

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

nathan

கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மாலை அல்லது இரவில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan