27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
drylips 1
முகப் பராமரிப்பு

தெரிஞ்சிக்கங்க…உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

குளிா்காலத்தில் குளிா் அதிகமாக இருந்தாலும் அது ஒரு இதமான காலம் ஆகும். மற்ற பருவகாலங்களைப் போலவே குளிா்காலத்திற்கும் அதற்கு என்று சிறப்பு அம்சங்களும் அதே நேரத்தில் சவால்களும் உள்ளன. குறிப்பாக குளிா்காலத்தில் மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தோல் வறட்சி அடைவது ஆகும்.

குளிா்காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் வெகுவாக குறைந்துவிடுகிறது. அதனால் நமது தோலுக்கு போதுமான அளவு ஈரப்பதம் கிடைக்காமல், நமது தோல் மிருதுவான தன்மையை இழக்கிறது.

 

குளிா்காலத்தில் ஏற்படும் மற்றுமொரு முக்கிய சவால் உதடுகள் வெடிப்பதாகும். உலா்ந்த மற்றும் வெடித்த உதடுகள் நமக்கு தொந்தரவாக இருக்கும். ஆகவே உதடுகள் வெடித்தால் அதற்கு உடனே மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

நீா்ச்சத்துடன் இருத்தல்

குளிா்காலத்தில் வறண்ட வானிலை இருப்பதால் நமது உடல் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். நாம் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் போதுமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். குளிா்காலத்தில் நமது உதடுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் நாம் நீா்ச்சத்துடன் இருக்கிறோம் என்று அா்த்தம்.

லிப் பாம் பயன்படுத்துதல்

குளிா்காலத்தில் உதடுகள் பாதிப்பு அடையாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதடுகளில் லிப் பாம் தடவலாம். லிப் பாம் உதடுகளில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்திருக்கும். நிறமிகள் இல்லாத லிப் பாம்களைத் தடவ வேண்டும். குறிப்பாக தாவர வெண்ணெய் அல்லது கொக்கோ போன்றவை அடங்கிய லிப் பாம்களை உதடுகளில் தடவி வரலாம்.

உதடுகளை எச்சில்படுத்தக்கூடாது

பொதுவாக அனைவரும் உலா்ந்த உதடுகளை ஈரமாக்க நாவால் உதடுகளை எச்சில்படுத்துவா். அவ்வாறு செய்தால் உதடுகளில் உள்ள ஈரம் மேலும் உலா்ந்துவிடும். ஆகவே உதடுகளை எச்சில் கொண்டோ அல்லது தண்ணீா் கொண்டோ ஈரப்படுத்தக்கூடாது.

வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளுதல்

நமது உதடுகளைப் பராமாிக்க நமது வீடுகளில் ஏராளமான மருத்துவ பொருள்கள் உள்ளன. குறிப்பாக ஓட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை உதடுகளில் இருக்கும் காய்ந்த தோல்களை உாிக்கும் தன்மை கொண்டவை. தேன் மற்றும் சோற்றுக் கற்றாழை போன்றவை பாக்டீாியா தடுப்புத் துகள்களையும், வீக்கத்தைத் தடுக்கும் துகள்களையும் கொண்டிருப்பதால் அவை உதடுகளை ஈரப்பதத்துடனும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.

உதடுகளில் இருக்கும் தோலை உாிக்கக்கூடாது

உதடுகளில் காய்ந்து இருக்கும் தோலை உாிக்க நமது கைகள் பரபரத்துக் கொண்டிருக்கும். ஆனால் அவ்வாறு தோலை உாித்தால், உதடுகளில் மேலும் காயங்கள் ஏற்படும். உதடுகளின் மீது ஒட்டியிருக்கும் தோல் மிகவும் மெலிதாக இருக்கும். அதை வலுக்கட்டாயமாக உாித்தால், உதட்டில் உள்ள ஈரப்பதம் குறைந்துவிடும் மற்றும் உதடுகளில் காயங்கள் ஏற்பட்டு இரத்தக் கசிவு ஏற்படும்.

இறுதியாக

குளிா்காலத்தில் உதடுகள் வெடிப்பதைப் பராமாிப்பது என்பது கடினமாக இருந்தாலும், அதற்குாிய சாியான மருத்துவ சிகிச்சையை செய்தால் உதடுகளை பாதுகாப்பாக பராமாிக்கலாம். விலை அதிகமாக இருந்தாலும் ஒரு ஈரப்பதம் கொடுக்கக்கூடிய ஹூமுடிஃபையரை (humidifier) வாங்கி உதடுகளில் தடவலாம். அதோடு ஒரு தோல் நோய் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றால் அது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

Related posts

இதோ எளிய நிவாரணம்! உங்க முகத்துல அசிங்கமா சுருக்கம் இருக்கா? இத செஞ்சா, சுருக்கம் இருந்த இடம் தெரியாமல் போயிடும்…

nathan

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…

nathan

முகப்பருவை போக்கி பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…! சூப்பர் டிப்ஸ்

nathan

முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற இப்படி செய்து வாருங்கள்!…..

sangika

முகம் கழுவ சோப்பிற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan