23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 61011d19db38f
அழகு குறிப்புகள்

வெளியான தகவல்! சர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல்!

இலங்கையில் கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து கிடைத்த உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முன், அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டும்.

சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும். நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது.

இந்த கல்லை இயலுமான வரை விரைவில் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.21 61011d1a03710

 

Related posts

4 வருடமாக கோமாவில் கிடக்கும் கார்த்திக் நரேன் படம் துருவங்கள் பதினாறு.. அடக்கம் பண்ணிய பிரபல இயக்குனர்

nathan

கழுத்தில் படரும் கருமை

nathan

பப்பாளி சருமத்தை பளபளப்பாக

nathan

லீக் ஆன நயன்தாரா – விக்கி திருமண அழைப்பிதழ்!

nathan

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan

சூப்பர் டிப்ஸ்.. இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்!!

nathan

இரு மகன்களையும் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.!

nathan

சூப்பர் டிப்ஸ் சரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா?

nathan

கண்களுக்கு கீழே கருவளையமா?

nathan