fat thigh area reduce Lying side leg raise
உடல் பயிற்சி

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி Lying side leg raise….

உடலைத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகளைக் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது. இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise).

இந்த பயிற்சி செய்ய முதலில்
தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.

இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

பலன்கள்: தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.
fat thigh area reduce Lying side leg raise

Related posts

தொப்பையை வேகமாக குறைக்கும் 4 யோகாசனம்

nathan

எடையை குறைக்க யாருக்கு என்ன பயிற்சி?

nathan

மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் உடற்பயிற்சி

nathan

உடல் முழுவதற்கும் சக்தி கிடைக்கும் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி

nathan

அம்மாக்கள் எடை குறைக்க… ஃபிட்னெஸ்! ~ பெட்டகம்

nathan

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ் தெரியுமா?..

sangika

வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

sangika

ஜிம்மில் ஜம்மென இருக்க வேண்டுமா?

nathan

கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்

nathan