தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் – 10, கடலை மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, எண் ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். கடலை மாவு டன் வதக்கிய காய்கறி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிது எண்ணெய் ஊற்றி, பிரெட் ஸ்லைஸை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலை மாவை பரவலாக ஊற்றவும். 2 நிமிடங் கள் கழித்து மெதுவாக திருப்பிப் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளைத் தூவி, பரிமாறவும்.