23.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
2 kajal 1
சரும பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா?

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால். இவருக்கு 35 வயதாகிவிட்டது. முக்கியமாக இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை. அதோடு மேக்கப் போடாமலும் அழகாக காட்சியளிக்கும் நடிகைகளுள் ஒருவரும் கூட.

இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார். குறிப்பாக இவர் எந்த ஒரு போட்டோவை தனது வலைத்தள பக்கத்தில் போட்டாலும், அவரது அழகிற்கு லைக்குகளும், ஷேர்களும் குவியும். அந்த அளவில் தனது அழகிற்கு என்றே தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டவர். உங்களுக்கும் காஜல் அகர்வாலைப் பிடிக்குமா? அவரது அழகு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

 

நேச்சுரல் ஃபேஸ் பேக்

காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கங்களில், தனது அழகிற்கு முக்கிய காரணம் தனது அம்மா உருவாக்கும் ஒரு ஃபேஸ் பேக் தான் என்று அடிக்கடி கூறியிருப்பதைக் கேட்டிருப்பீர்கள். இந்த ஃபேஸ் பேக்கானது தேன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகியவற்றின் கலவையாகும். இந்த ஃபேஸ் பேக்கை தான் காஜல் அடிக்கடி தனது முகத்தை சுத்தப்படுத்த பயன்படுத்துவாராம்.

 

பாதாம் ஸ்கரப்

காஜல் அகர்வால் அவரது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு பாதாம் ஸ்கரப்பைப் பயன்படுத்துவாராம். இந்த ஸ்கரப்பானது பொடி செய்யப்பட்ட பாதாம் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். காஜல் அகர்வால் இந்த பாதாம் ஸ்கரப்பை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவாராம். அதுவும் இந்த ஸ்கரப்பை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தேய்த்துக் கழுவுவாராம்.

தேங்காய் சார்ந்த பொருட்கள்

நடிகை காஜல் அகர்வால் எப்போதும் தேங்காய் சார்ந்த பொருட்களைத் தான் பயன்படுத்துவாராம். இவரைப் பொறுத்தவரை இந்த வகைப் பொருட்கள் தான் சருமத்திற்கு ஊட்டமளித்து, வறட்சி அடையாமல் தடுக்கிறது என்றும் கூறுகிறார்.

கிளீனிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங்

அழகாக காட்சியளிக்க வேண்டுமானால், சற்று சிரமப்பட வேண்டும். காஜல் அகர்வால் தனது அழகைப் பராமரிக்க ஒரு நாளும் சோம்பேறித்தனப்பட்டதில்லை. தினமும் அவர் கிளீனிங், டோனிங், மாய்ஸ்சுரைசிங் செயல்முறையை தனது சருமத்திற்கு தவறாமல் மேற்கொள்வாராம். இதுவரை ஒருநாள் கூட தவறியது இல்லையாம்.

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

காஜல் அகர்வால் தனது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகப்பொலிவை மேம்படுத்த வாரத்திற்கு ஒருமுறை முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவாராம்.

என்ன நண்பர்களே! இப்போது நடிகை காஜல் அகர்வாலின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொண்டீர்களா? உங்களுக்கும் இவரைப் போன்ற மென்மையான, அழகான சருமத்தைப் பெற நினைத்தால், உங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதைத் தவிர்க்காமல், தினமும் இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வாருங்கள்.

Related posts

எண்ணெய் சருமத்திற்கான இதோ எளிய தீர்வுகள்!

nathan

முகத்தில் எண்ணெய் வழிந்தோடும். இது அவர்களது முகத்தை பொலிவிழந்து, சோர்வுடன் காட்சியளிக்கும்

nathan

உடலுக்கு பொலிவைத் தரும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி இருக்கிறீர்களா?

nathan

மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

nathan

அவசியம் படிக்க.. கழுத்தில் இருக்கும் கருமை நீங்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

nathan

கோடையிலும் முகம் பளபளப்பா இருக்கணுமா?

nathan

Super Beauty tips.. சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?!

nathan

உங்களுக்கு தெரியுமா வசிகரிக்கும் அழகை பெற செய்ய வேண்டியவைகளும்! செய்ய கூடாதவைகளும்!

nathan

முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? அப்போ இத செய்யுங்கள்!…

sangika