33.9 C
Chennai
Sunday, Aug 10, 2025
IMG 7272
அசைவ வகைகள்

பட்டர் சிக்கன் மசாலா

என்னென்ன தேவை?

சிக்கன்-1/2 கிலோ
தக்காளி கூழ்-2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்-2
மிளகாய் தூள்-2 தேக்கரண்டி
கரம் மசாலா-1 தேக்கரண்டி
வெந்தய இலை- 2 தேக்கரண்டி
ப்ரெஸ் கிரீம்-1/2 கப்
சோள மாவு- 1 டீஸ்பூன்
எண்ணெய்-1 டீஸ்பூன்
வெண்ணெய்-3 டீஸ்பூன்
உப்பு-ருசிக்கு
சர்க்கரை 1 தேக்கரண்டி

எப்படி செய்வது?

சுத்தம் செய்த சிக்கனுடன் சோள மாவு, மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிசைந்து சிறிது நேரத்திற்கு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை கலர் மாறாமல் பொரித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கூழாக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு நன்றாக கிளறி கரம் மசாலா சேர்த்து கிளறி பொரித்த சிக்கனை கடாயில் போட்டு உப்பு தேவையான அளவு சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை சிறிது நேரம் வேகவிடவும். பின்னர் வெந்தய இலையை சேர்த்து கிரிமை அதனுடன் கலந்து மூடி வைத்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி இலை தூவினால் பட்டர் சி்க்கன் மசாலா தயார்.
IMG 7272

Related posts

கருவாட்டு ப்ரை(Karuvadu Fry)

nathan

முட்டை பிரியாணி செய்வது எப்படி

nathan

இறால் வறுவல்

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

சிக்கன் ரோஸ்ட்

nathan

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

nathan

கேரட் முட்டை ஆம்லெட்

nathan

சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு

nathan

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan