24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
80 6diet
மருத்துவ குறிப்பு

நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 15 அறிகுறிகள்!!!

நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? நம்மில் பலரும் மேற்கொண்டுள்ள இயல்பான முயற்சியே அது. டயட் இருத்தல், உடற்பயிற்சி செய்தல் போன்ற பல்வேறு வழிகளில் உங்கள் உடல் எடையை நீங்கள் குறைக்க முயற்சி செய்து கொள்வது வழக்கமான ஒன்றே. அதில் முதல் வழியாக பலரும் தேர்ந்தெடுப்பது சரியான டயட்டை மேற்கொள்வது. பொதுவாக உங்கள் டயட்டில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், நார்ச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய பொருட்கள் நிறைந்திருக்க வேண்டும். அப்போது தான் உடலின் தசைகள் வளர்ச்சி அடைந்து கொழுப்பும் வேகமாக குறையும்.

மேற்கூறிய பொருட்களை கொண்டுள்ள டயட்டை நாம் பின்பற்றும் போது, அது நமக்கு சாதகமாக வேலை செய்து உடல் எடையை குறைக்க உதவ வேண்டும். ஆனால் ஒரு வேளை, அது அப்படி செய்யவில்லை என்றால், அதற்கான மாற்று வழிகளை தேர்ந்தெடுக்க நீங்கள் ஆலோசிக்க வேண்டும். உங்கள் உடலுக்கு ஒத்துப்போவதை போல் டயட்டை மாற்றிப் பாருங்கள். டயட்களை மாற்ற வேண்டிய நிலை வந்தால், அது சில அறிகுறிகளால் காட்டி கொடுத்து விடும். நம்ம வடிவேலு சொல்ற மாதிரி சில டயட்டக்ளில் ஓபனிங் எல்லாம் நல்லா தான் இருக்கும், ஆனால் ஃபினிஷிங் சரியிருக்காது.

அப்படி சில டயட்கள் உங்களுக்கு ஆரோக்கியமாக அமையவில்லை என்பதை சில அறிகுறிகள் காட்டிக் கொடுத்து விடும் என கூறினோம் அல்லவா? அவைகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாமா? இந்த அறிகுறிகளை சரியாக புரிந்து கொண்டால், நீங்கள் எங்கே தவறு இழைத்துள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்வீர்கள். சரி, டயட்டை மாற்றுவதற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

சோர்வாக இருக்கும்

உங்கள் உடல் வலுவிழக்கும் போது, உங்களால் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி மேலும் அழுத்தங்களை எடுத்துக் கொள்ள முடியாது. இதுவே உணவை பழக்கத்தை மாற்றுவதற்கான முதல் அறிகுறியாகும்.

அலர்ஜிகள் உருவாக ஆரம்பிக்கும்

உங்களை அலர்ஜிகள் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டதா? அது நீங்கள் பின்பற்றும் டயட்டினாலும் கூட இருக்கலாம். நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதை சொல்லும் முக்கியமான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

அதிகமாக பசி எடுக்கும்

டயட்டை தொடங்கிய உடனேயே, உங்களை அது பசியில் ஆழ்த்தி விடக்கூடாது. அப்படி செய்தால், நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள்.

தொடர்ச்சியான உடல் வலி

டயட்டை மாற்ற வேண்டும் என உங்களுக்கு குறிக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக இருப்பது உடல் வலி. உங்கள் உணவு தட்டில் உள்ள ஏதோ ஒன்று தான் உங்கள் உடல் வலிக்கு காரணமாக இருக்கும்.

மன அழுத்தம் அடியெடுத்து வைக்கும்

உங்கள் டயட் திட்டத்தினால் மன அழுத்தம் அடியெடுத்து வைத்தால், உங்கள் டயட்டை நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும். உணவினால் கண்டிப்பாக மன அழுத்தம் ஏற்பட கூடாது.

உங்கள் டயட்டின் மீது வெறுப்பு ஏற்படுவது

உங்கள் டயட்டின் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட தொடங்கி விட்டால், அதை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. டயட்டின் மீது வெறுப்பு ஏற்படும் போது அதனால் எந்த பிரயோஜனமும் கிடைக்காது. குறிப்பாக உங்கள் உடல் எடை திட்டத்தின் மீது.

எடையில் எந்த முன்னேற்றமும் இருப்பதில்லை

ஒரு மாத டயட்டிற்கு பிறகு, எடை குறைவில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றால் நீங்கள் உங்கள் டயட்டை கண்டிப்பாக மாற்ற வேண்டிய நேரமிது. அதற்கு காரணம் நீங்கள் பின்பற்றியது உங்களுக்கு ஆரோக்கியமற்றதாய் அமைந்துள்ளது.

பிறருடன் சேர்ந்து உணவருந்த முடியாமல் போவது

குடும்பம் மற்றும் நண்பர்களுடம் சேர்ந்து உணவருந்தும் போது தேர்ந்தெடுப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க கூடாது. நீங்கள் டயட்டில் இருந்தும் இயல்பற்ற முறையில் உண்ண ஆரம்பித்தால், உடல் எடை குறைப்பதற்கு அது தவறான முறையாகும்.

பட்டினியே முன்னுரிமையை பெறும்

உடல் எடையை குறைக்க பட்டினி இருப்பது வழியல்ல. நீங்கள் பட்டினி இருந்தால் உங்கள் உடல்நலத்தை தான் கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உடலில் இருந்து கொழுப்பு அகலவே அகலாது.

மனநிலை ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும்

மனநிலை ஏற்ற இறக்கத்திற்கு உங்கள் டயட் முக்கிய பங்கை வகித்தால், உங்கள் டயட் உங்களுக்கு ஆரோக்கியமற்றதாக உள்ளதற்கான அறிகுறி இதுவாகும். நீங்கள் உண்ணும் உணவு உங்களை சந்தோஷப்படுத்த வேண்டும்.

அதிக உடல் சுகவீனங்கள் தலை தூக்கும்

டயட்டில் இருக்கும் போது, நீங்கள் உண்ணும் உணவு உங்கள் உடலை சமநிலைப்படுத்த வேண்டும். அதனால் நல்ல ஆரோக்கியம் வந்து சேரும். இருப்பினும், உடல் சுகவீனங்களை ஏற்படுத்தும் உணவுகளை நீங்கள் உட்கொண்டால், அதனை உடனே நிறுத்த வேண்டும்.

வெகு விரைவில் முதிர்ச்சி எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடும்

நீங்கள் பார்ப்பதற்கு பொலிவிழந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, பருக்கள் அதிகரித்து காணப்பட்டால், கண்டிப்பாக உங்கள் உணவில் ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். இந்த அறிகுறியை லேசாக எடுத்துக் கொள்ளாமல் உடனே டயட்டை மாற்றுங்கள்.

உங்கள் மூட்டுக்கள் வலியெடுக்க தொடங்கும்

உங்கள் உடல் வலி மோசமடைந்து, மூட்டுக்களில் வலியெடுக்க ஆரம்பித்தால், உங்கள் டயட்டில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். உடனே அதனை கவனிக்கவும்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் வாயிலாக பிரதிபலிக்கும்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மெட்டபாலிச அளவுகள் குறையத் தொடங்கினால் ஆரோக்கியமற்ற உங்கள் டயட்டை மாற்ற வேண்டிய நேரமிது. உங்கள் ஆற்றல் திறனை உறிஞ்சும் உணவிற்கு பதிலாக ஆற்றல் திறனை அதிகரிக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

செரிமான தொந்தரவுகள்

உங்கள் உடலுக்கு தவறான உணவுகளை அளித்து வந்தீர்கள் என்றால், உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் உடல் எடை குறைப்பிற்கான சரியான டயட்டை பின்பற்றவில்லை என்பதற்கான முக்கிய அறிகுறி இதுவாகும்.

Related posts

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மூன்று முடிச்சு போடுவது ஏன்?என்று தெரியுமா?

nathan

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?

nathan

தகவல் அறுவை சிகிச்சையின் வலி அதிகமாக? அறுவை சிகிச்சையின் வலி இந்தளவுக்குத் தாங்கமுடியாததா?

nathan

மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?

nathan

சூப்பர் டிப்ஸ்! மூட்டு வலியை அடியோடு அழிக்கும் முடக்கதான் கீரை வாழை இலை இட்லி.. எப்படி செய்வது?..

nathan

இதோ எளிய நிவாரணம்! இந்த அற்புத மூலிகை தேநீர் குடிச்சு பாருங்க…

nathan

மனித உறவுகள் சீராக இருக்க….. A to Z

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு 4 வாரம் வரை இரத்தப்போக்கு இருக்குமா?

nathan

அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றி உங்களை கஷ்டப்படுத்துகிறதா…? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan