25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
preganacyt 01
மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

கர்ப்பிணிகளிடம் இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது என நிறைய கட்டளைகள் பெரியவர்கள் இடுவதுண்டு. காரணம் இந்த சமயங்களில் ஒரு உயிரை தாங்கி வெளிவருவது எளிதல்ல, உடல் மற்றும் மன ரீதியாக நிறைய மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டும்.

அதோடு அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் உண்டாகாமல் பாதுகாப்பாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு தாயின் கடமையாகும்.

பெண்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது என சொல்வார்கள். அவற்றில் எந்த அளவிற்கு உண்மைகள் உள்ளது என அறிவியல் ரீதியாகவும் ஆராயலாமா?

கர்ப்பிணிகள் இரண்டு உயிருக்காக சாப்பிடுவதைப் பற்றி :

நீங்கள் இதை எல்லா இடத்திலும் கேள்விப்பட்டிருப்பீர்கள். “உன் உடம்பில் இன்னொரு உயிரும் இருக்கு. அதனால இர்ண்டு மடங்கு சாப்பிடு” என அளவுக்கு அதிகமாக தாயை சாப்பிட கட்டாயப்படுத்துவார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் கர்ப்பம் தரித்த ஒரு பெண்ணிற்கு வழக்கத்தை விட 300 கலோரியே அதிகம் தேவை. அது ஒரு வாழைப் பழ மில்க் ஷேக், பனீர் பிரட் சேன்ட்விச், முளியக் கட்டிய தானியம் இவைகளில் ஈடுபடுத்திவிடலாம். எனவே எப்போதும் போலவே சாப்பிடுங்கள். கூட ஒரு 300 கலோரி அதிகரிக்கும் அளவிற்கு சாப்பிடுங்கள் போதும்.

மீன் சாப்பிடக் கூடாது என்பதைப் பற்றி :

” கர்ப்பிணிகள் மீன் சாப்பிடக் கூடாது. இதிலுள்ள சில சத்துக்கள் விஷத்தை உருவாக்கும். அதிக சூட்டை தரும், சரும அலர்ஜியை உண்டாக்கும்”- என்று சொல்லி கேட்டிருப்பீர்கள்.

மீனில் உள்ள ஒமேகா மற்றும் பல அருமையான சத்துக்கள் கருவின் மூளை வளர்ச்சியை தூண்டுகிறது. டனா, ஷார்க் போன்ற மீன்கள் அதிக மெர்குரி கொண்டிருப்பதால் அவற்றை சாப்பிடக் கூடாது.

ஆனால் ஆற்று மீன், சாலமன் நெத்திலி மீன் ஆகியவை சாப்பிடலாம். குறைந்த அளவு சாப்பிடுவதால் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

குங்குமப் பூவை பாலில் கலந்து குடிப்பது பற்றி :

“குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்”- இது முற்றிலும் தவறான நம்பிக்கை. குழந்தையின் நிறம் , குணம் எல்லாம் ஜீனில் பதியப்பட்டவை. அவற்றை மாற்ற இயலாது. குங்குமப் பூவில் இரும்புச் சத்து உள்ளது. அதனை பாலில் கலந்து குடிப்பது ரத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இதனை குடிப்பது நல்லது என்பது தவிர வேறொன்றும் நிஜமில்லை.

பப்பாளி , அன்னாசி சாப்பிடக் கூடாது என்பதைப் பற்றி :

“பப்பாளி, அன்னாசி சாப்பிடக் கூடாது” – இது தவறு. பப்பாளியும் அன்னாசி யும் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அவற்றை தயக்கமின்றி சாப்பிடலாம். 4 வது மாதத்தில்ருந்து கருவின் வளர்ச்சிக்கு பப்பாளியை சாப்பிடலாம்.

பப்பாளியோ, அன்னாசியோ நன்றாக பழுக்காமலிருந்தால், அவற்றை சாப்பிடும்போது கருப்பை இறுக்கமடையும். இதனால் வலி உண்டாகும். எனவே பப்பாளி சாப்பிட வேண்டாம் என கூறுவர். ஆனால் நன்றாக பழுத்த பப்பாளி மற்றும் அன்னாசி குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.

குளிர்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது என்பதை பற்றி :

“எலுமிச்சை, ஆரஞ்சு, ஜூஸ் போன்ற சிட்ரஸ் பழங்கள், மோர், போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இதனால் அம்மாவிற்கு ஜலதோஷம் பிடித்தால், குழந்தைக்கும் பிடித்துவிடும்” – இது முழுக்க முழுக்க தவறு.

விட்டமின் சி நிறைந்த உணவுகள் நிறைய எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. கருவிற்கு பலமான பாதுகாப்பு வளையத்தை இந்த சத்துக்கள் உருவாக்கும். அதிக இரும்புச் சத்துக்களையும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளையும், குழந்தைக்கு அளிக்கும். ஆகவே இவற்றை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கேன்சர் நோயை துரத்தி அடிக்கும் பூண்டு!

nathan

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!

nathan

காது, மூக்கு, தொண்டை வலிக்கு நஸ்யம் சிகிச்சை

nathan

உடல் சூடு தீர்க்கும் மூலிகைகளும் அவற்றின் அற்புத நன்மைகளும்!! சூப்பர் டிப்ஸ்…

nathan

தோல் நோய் குணமாக…

nathan

உங்களுக்கு தெரியுமா மூலம் நோய்க்கு வீட்டிலேயே செய்யும் இயற்கை மருந்து…

nathan

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் உடல் உபாதைகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா?

nathan

தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்..

nathan