கர்ப்பம் தரித்தபின் அந்த 9 மாதங்கள் சாதரணமானதல்ல. பெண்களின் உயிரை உருக்கி இன்னொரு உயிர் வளரும் ஒவ்வொரு காலக்கட்டமும் மிக முக்கியமானது. அதுவும் அந்த சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு உடலில் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அவை எதையும் பிறக்கப் போகும் தங்களின் சிறு உயிருக்காக தாங்கிக் கொண்டிருப்பார்கள். அந்தசமயங்களில் கர்ப்ப கால பிரச்சனைகளிலிருந்து எப்படி விடுப்டலாம் என பார்க்கலாம்.
குமட்டல் வாந்தி :
முதல் மூன்று மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் அடிக்கடி வரும். சரியாக சாப்பிட முடியாது. சாப்பிட எதுவும் பிடிக்காது. இந்த மாதிரியான நேரங்களில் அம்மாக்களின் உடலில் ரத்தம் போதிய அளவு இருக்காது.
அதனால் மருத்துவர்கள் விட்டமின் பி-6 மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். மேலும் ரத்த சோகை ஏற்படலாம். கரு தன் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்க்ளை ரத்தம் மூலமாக அது உறிவதால் இரும்பு சத்து குறைவாக இருக்கும். எனவே இரும்பு சத்து மாத்திரைகளையும் அந்த நேரத்தில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாந்தி வருகிறதே என சாப்பிடாமல் இருக்கக் கூடாது. ஏனெனில் கருவின் மிக முக்கிய வளர்ச்சி அந்த சமயத்தில்தான் நடக்கும். ஆகவே இடைவெளி விட்டு சிறிது சிறிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நெஞ்செரிச்சல் :
இரைப்பையை புறம் தள்ளி கரு வளரும்போது, சாப்பிடும் உணவு மற்றும் நொதிகள் உனவுக் குழாய்க்கு அடிக்கடி வரும். இதனால் அஜீரணம், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படும். எனவே நீராகாரம் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மசாலா காரம் நிறைந்த உணவுகளை உன்ணக் கூடாது. அது போல நிறைய பழங்களை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் குறையும்.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் கர்ப்ப காலத்தில் சிலருக்கு ஏற்படும். இரும்பு சத்து நிறைந்த உணவுகளும், கர்ப்பப்பை கீழே உந்தப்படுவதால் உண்டாகும் பாதிப்பால் இவ்வாறு மலச்சிக்கல் உண்டாகும். ஆகவே நிறைய நீர்சத்து நிறைந்த பழங்கள், நார்சத்து நிறைந்த காய்களை உண்ணுவதே நல்லது.
முதுகு வலி :
அநேக பேர் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இதனை தவிர்க்க அவ்வப்போது இளஞ்சூட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம். சூடா நீரில் குளித்தால் பலனளிக்கும்.