நம்மில் பலரும், பல நேரங்களில் உண்ணக்கூடிய அளவை விட அதிகமாக சாப்பிடுவோம், ஜங்க் உணவுகளை உண்ணுவோம் அல்லது ஏதாவது வேளைகளில் உண்ண வேண்டிய உணவை உண்ணாமல் தவிர்த்து விடுவோம். அதற்கு காரணம் நமக்கு இருக்கும் வேலைப்பளு அல்லது மனஅழுத்தம். இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் பாதிக்கப்படக்கூடியது நம் செரிமான அமைப்பே. இதனால் நம் உடல் ஆரோக்கியமும் கெட்டு விடும். செரிமானமின்மை, வயிற்று பொருமல், அமில எதிர் செயலாற்றல், மலச்சிக்கல், சளி, புண்கள் ஆறுவதற்கு நீண்ட காலமாவது, குறைந்த ஆற்றல் திறன்கள் போன்ற பல விதமான பிரச்சனைகளை இதனால் நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவில் உள்ள 5000 வருட பழமையான ஆயுர்வேத மருத்துவத்தில், 3 நாட்கள் செரிமான மீட்டமைப்பு செயல்முறை ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பின்பற்றினால் நம் செரிமானம் நிறுத்தப்பட்டு, குணமடைந்து, ஓய்வு பெறும். இதன் பலனாக அதிகரித்த ஆற்றல் திறன், ஆரோக்கியம் மற்றும் குணமாகும் நன்மைகளை நாம் பெறலாம்.
செரிமானத்திற்கு என்று சொந்த ஆற்றல் திறனும், அன்றாட ரிதமும் உள்ளது. இதன் ஏற்ற இறக்கத்தால் தான் காலையில் லேசாக பசிக்கிறது, மதியம் அதிகமாக பசிக்கிறது, இரவில் லேசாக பசிக்கிறது. இந்த இடைப்பட்ட நேரங்களில், நீங்கள் உட்கொண்ட உணவை செரிமானமடைய செய்வதற்கு, உங்கள் செரிமான அமைப்பு பசியை கட்டுப்படுத்தி விடும். செரிமானம் முடிந்தவுடன் மீண்டும் பசியெடுக்க தொடங்கும். இந்த செயல்முறைக்கு தடங்கல் வந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ, உங்கள் உடல் குழம்பி போய்விடும். இதனால் உங்கள் பசியும், செரிமானமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்பட தொடங்கிவிடும். இதனால் உங்கள் செரிமான சக்தியும் ஒட்டு மொத்த உடலின் உற்சாகமும் குறைந்துவிடும்.
உங்கள் செரிமானத்தில் பிரச்சனை இருப்பதை நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால், இந்த செயல்முறையை உடனே பின்பற்றுங்கள்:
வெள்ளிக்கிழமையன்று…
• சாதாரண காலை உணவு மற்றும் மதிய உணவை உண்ணுங்கள்.
• காலை எழுந்தவுடன் 1-2 மணிநேரத்தில் காலை உணவை உண்ண வேண்டும்.
• மதிய உணவு தான் நீங்கள் அன்றைய நாளில் உண்ணக் கூடிய அதிகப்படியான அளவை கொண்ட உணவாக இருக்க வேண்டும்.
• மதிய உணவிற்கு பிறகு நொறுக்குத்தீனியோ அல்லது மதுபானமோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
• குறைந்த அளவிலான ஆனால் திருப்திகரமான இரவு உணவை உட்கொள்ளுங்கள். படுப்பதற்கு 2 மணிநேரத்திற்குள் இரவு உணவை முடித்து விடுங்கள்.
• இரவு உணவிற்கு பிறகு இரண்டு டம்ளர் இளஞ்சூடான தண்ணீரை குடியுங்கள்.
சனிக்கிழமையன்று…
செரிமானத்தை மீட்டமைப்பதற்கு முன் அதனை குறைக்க வேண்டும். அதற்கு உணவருந்தாமல் நீராகாரமாக குடிக்க வேண்டும்.
• காலை அல்லது மதிய வேளையில் சிறிது தூரம் நடை கொடுங்கள்.
• காலை, மதியம் மற்றும் சாயங்காலத்தில் ஜூஸ் குடியுங்கள்.
• உங்களுக்கு பசி எடுத்தாலும் சரி அல்லது விருப்பப்பட்டாலும் சரி, இரண்டு வேளைகளுக்கு மத்தியில், நாள் முழுவதும் 3-4 கிளாஸ் குடிக்கலாம்.
• தண்ணீரை அடிக்கடி குடியுங்கள். குறிப்பாக நற்பதமான எலுமிச்சை கலக்கப்பட்ட தண்ணீர்.
• மிதமான நடவடிக்கை செய்து அன்றைய நாளை அமைதியாக கொண்டு செல்லுங்கள்.
ஞாயிறுக்கிழமையன்று…
உங்கள் செரிமானத்தை மீண்டும் தொடங்க செய்து, அதன் இயல்பான சுழற்சிகளில் செயல்பட வைக்க வேண்டும்.
• காலையில் எழுந்த 1-2 மணிநேரத்திற்கு பிறகு மிதமான காலை உணவை எடுத்துக் கொள்ளவும்.
• நண்பகல் வரை எதுவும் உண்ண வேண்டாம். மதிய வேளையில் திருப்தி அளிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள், ஆனால் அதிகமாக அல்ல.
• மீண்டும் இரவு உணவு உண்ணும் வரை எதுவும் உண்ணாதீர்கள். படுப்பதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துக் கொள்ளவும். மதிய உணவின் அளவை விட இரவு உணவு குறைவாக இருக்க வேண்டும்.
குறிப்பு
உங்கள் செரிமானம் மீட்டமைப்பு அடைந்துள்ளதால், உங்களின் பசி சுழற்சி இயற்கையாகவே இதனை கேட்க செய்யும்:
• காலை எழுந்த 1-2 மணிநேரத்திற்கு பிறகு மிதமான காலை உணவு.
• தினமும் அதே நேரத்தில் கணிசமான மதிய உணவு.
• தினமும் சீக்கிரமாக உண்ணக்கூடிய மிதமான இரவு உணவு.
உங்கள் செரிமானத்தை சீர்படுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த செயல்முறையை எப்போது வேண்டுமானாலும் பின்பற்றலாம். இதனால் உங்கள் செரிமான பிரச்சனைகள் குணமடைந்து, உங்கள் ஆற்றல் திறனும் ஆயுளும் அதிகரிக்கும்.