தர்பூசணியில் உள்ள விதைகளை நீக்கி விட்டு அதனை அரைத்து பின் அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பால் பயன்படுத்தி துடைத்து இறுதியில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்க வேண்டுமானால் அரைத்த தர்பூசணியில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டூம். இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் சிறந்தது.
மென்மையான சருமம் வேண்டுமெனில் அரைத்த தர்பூசணியுடன் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவினால் தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட் மற்றும் நொதிகள் சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி பொலிவான மென்மையான சருமத்தைப் பெற உதவிபுரியும்.
தர்பூசணி மற்றும் சர்க்கரை இந்த மாஸ்க் ஒரு சிறப்பான சரும அழுக்குகளைப் போக்குபவை. அதற்கு அரைத்த தர்பூசணியுடன் சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.
இது ஒரு சூப்பரான டோனர். இதற்கு தர்பூசணி சாற்றில் பால் சேர்த்து கலந்து சருமத்தில் தடவ வேண்டும். மேலும் இது ஒரு சிறந்த சரும கருமையைப் போக்க உதவும் முறை.
தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் மிகவும் ஈஸியான முறையில் பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமெனில் தர்பூசணி சாற்றில் அரைத்த வெள்ளரிக்காய் தயிர் மற்றும் பால் பவுடர் சேர்த்து கலந்துஇ சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட வேண்டும்.