26.5 C
Chennai
Thursday, Nov 21, 2024
26 coconut powder rice
சமையல் குறிப்புகள்

சூப்பரான தேங்காய் பொடி சாதம்

காலையில் நல்ல சுவையான, அதே சமயம் வித்தியாசமான வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், தேங்காய் பொடி சாதம் செய்து சாப்பிடுங்கள். இது சமைப்பது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, மதியம் சாப்பிடுவதற்கு ஏற்றவாறும் இருக்கும். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

இங்கு அந்த தேங்காய் பொடி சாதத்தின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

சாதம் – 1 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 1
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு அத்துடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, 15 நிமிடம் மூடி வைத்து பின் பரிமாறினால், சுவையான தேங்காய் பொடி சாதம் ரெடி!!!

Related posts

சுவையான மட்டர் பன்னீர்

nathan

சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல்

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்….

sangika

சுவையான மலாய் பன்னீர் கிரேவி

nathan

குறுகிய நேரத்தில் சுவையான பச்சை மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

சுவையான கத்திரிக்காய் பக்கோடா

nathan

சுவையான மிளகு அவல்

nathan

சளிக்கு இதமான… மிளகு பூண்டு குழம்பு

nathan

காரத்துடனும், கூடுதல் ருசியுடனும் அப்பளம்…

sangika