செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க சில வழிகளை பின்பற்றலாம்.
வைப்ரேட்
போன் வைபரேட் மோடில் இருந்தால் பேட்டரி சார்ஜ் விரைவில் குறையும். அதனால் முடிந்த அளவு வைபரேட் மோடை கட் செய்வது நல்லது. அதேபோன்று ஸ்மார்ட் போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும். ஹேப்டிக் ஸ்பீட் பேக் எனும் பொறியையும் நிறுத்தி வைக்கவேண்டும்.
வால் பேப்பர்கள், ஸ்மார்ட் போன் அமோல்டட் டிஸ்ப்ளே கொண்டதாக இருந்தால், கருப்பு நிற வால் பேப்பர்களைப் பயன்படுத்தினால் பேட்டரி சார்ஜ் அதிகம் செலவாகாது.
ஆன்ட்ராய்டு அப்டேட்
ஸ்மார்ட் போன் செயல்பாட்டை அதிகரிக்க கூகுள் நிறுவனம் அவ்வப்போது இயங்குதளத்துக்கான அப்டேட்களை அளிக்கும். ஒவ்வோர் அப்டேட்டுகளையும் தவறாமல் இன்ஸ்டால் செய்வது பேட்டரியின் ஆயுளைக் குறிக்கும்.
ஏர்பிளேன் மோட்
ஸ்மார்ட் போனில் உள்ள ஏர்பிளேன் மோட் ஆப்ஷன் உங்கள் வெளியுலகத் தொடர்பை மட்டுமல்ல; வீடியோ போன்ற மல்டி மீடியா ஆப்ஸ்களுக்குத் தேவையான பேட்டரி சார்ஜை அதிக நேரம் அளிக்கவல்லது.
நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களில் நீங்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட்போன் ஆன்டெனா அதிகப்படியான பேட்டரி பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதால் அதுபோன்ற நேரங்களில் மொபைலை ஏர்பிளேன் மோடுக்கு மாற்றிவிடுங்கள்.
ஜி.பி.எஸ், வைஃபை
தேவையற்ற நேரங்களில் ஜி.பி.எஸ். புளுடூத் போன்றவற்றை ஆஃப் செய்து விடுங்கள். அதேபோல மொபைல் நெட்வொர்க் வழியாக இணையத்தில் இணைத்திருந்தால், வைஃபை இணைப்பைத் துண்டித்து விடுவது நல்லது.