25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 1419339948 1 skin
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான நன்மைகள்!!

நம் உணவில் முக்கிய கூட்டுப்பொருளாக இருப்பது உப்பு. உப்பு இல்லாமல் எதுவுமே இல்லை. ‘உப்பில்லா பண்டம் குப்பையிலேயே’ என சும்மாவா சொன்னார்கள். ஆனால் ருசியை மேம்படுத்துவதோடு மட்டும் உப்பு நின்று விடுவதில்லை. அதையும் தாண்டி அது நம் உடலுக்கு வேறு பல வகையில் உதவி புரிகிறது. பல்வேறு வகையான காயங்கள் மற்றும் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது.

எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? உப்பு தண்ணீரில் குளிப்பதன் மூலம் பல உடல்நல பயன்கள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உப்பு தண்ணீரில் தொடர்ச்சியாக குளித்து வந்தால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல பயன்களை அளிக்கும். சுருக்கமாக சொன்னால், அது உங்கள் வாழ்க்கையை நீங்கள் நினைப்பதை விட அதிகமாகவே மாற்றிவிடும். சரி, அதன் பயன்களைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

சருமத்திற்கு மிகவும் நல்லது

சுத்தமான மற்றும் இயற்கையான வடிவத்தில் பயன்படுத்தும் போது, உப்பு தண்ணீர் குளியலில் அதிக கனிமங்களும், ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். மெக்னீசியம், கால்சியம், புரோமைட், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் உங்கள் சரும துளைகளுக்குள் உறிஞ்சப்படும். இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக்கும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.

நச்சுத்தன்மையை நீக்க உதவும்

சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உப்பு குளியல் உதவிடும். வெதுவெதுப்பான நீர் சரும துளைகளை திறக்கும். இதனால் கனிமங்கள் ஆழமாக உள்ளிறங்கி, மிக ஆழமாக சுத்தப்படுத்தும். நாள் முழுவதும் உங்கள் சருமம் உறிஞ்சியுள்ள ஆபத்தான நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை உப்பு தண்ணீர் குளியல் நீக்கும். இதனால் உங்கள் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.

இளமையான தோற்றத்தை பெறுவீர்கள்

உப்பு தண்ணீர் குளியலை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும். இது சருமத்தை மென்மையாக்கும். இது சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும். மேலும் தினசரி வாழ்க்கையில் நாம் தொலைத்த சரும பொலிவை இயற்கையான வழியில் கிடைக்க உதவும்.

பல வகையான பிரச்சனைகளை தீர்க்கும்

சருமத்திற்கு பயனளிப்பதை தாண்டி இன்னும் பல பயன்களை அளிக்கிறது உப்பு தண்ணீர் குளியல். கீல்வாதம் மற்றும் தசைநாண் அழற்சி போன்ற கடுமையான நிலைகளுக்கு சிகிச்சை அளித்திடவும் இது முக்கிய பங்கை வகிக்கிறது. உறுதியான இணக்கமுள்ள சவ்வு மற்றும் அதற்கு அடியில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடையும் போது கீல்வாதம் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. தசைநாரில் வீக்கம் ஏற்படும் போது தசைநாண் அழற்சி உண்டாகும். மேலும் அரிப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளையும் உப்பு தண்ணீர் குளியல் போக்கும்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

உடல் ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்த உப்பு தண்ணீர் குளியல் உதவுவதை போல், மன ரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது. உப்பு தண்ணீரில் குளித்த பிறகு, உங்களுக்கு அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். அழுத்தத்தை போக்கும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது உப்பு தண்ணீர் குளியல். உங்கள் மன அமைதி மற்றும் நிம்மதியையும் அவை மேம்படுத்தும்.

இறந்த சருமம் நீக்குவதை மேம்படுத்தும்

உங்கள் சருமத்தை உகந்த அளவில் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு வழி தான் இறந்த சருமத்தை நீக்குவது. உப்பு தண்ணீரில் குளித்தால் இதனை அடையலாம். பாஸ்பேட் போன்ற சில வகையான உப்பு தண்ணீர் குளியல் டிடர்ஜெண்ட் போன்ற எதிர்வினையை உண்டாக்கும். மரத்துப் போன சருமத்தை மென்மையாக்கவும், இறந்த சருமத்தை நீக்குவதில் உதவிடவும் இது உதவும்.

அசிடிட்டிக்கு சிகிச்சையளிக்கும்

இன்றைய பலரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை அசிடிட்டி. பக்க விளைவுகளை ஏற்படுத்தும் விலை உயர்ந்த மருந்துகளை நாடுவதை விட, உப்பு தண்ணீர் குளியலை தேர்ந்தெடுக்கலாம். இதில் அல்கலைன் குணம் அடங்கியுள்ளதால், உப்பு தண்ணீர் குளியல் அசிடிட்டியை போக்கும்.

பாத தசைகளுக்கு பயனை அளிக்கும்

உடலிலேயே அதிக அழுத்தம் ஏற்படும் பாகங்களே பாதம் தான். அது தான் எப்போதுமே நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் உங்கள் உடலேயே தாங்கி பிடிக்கிறது. தசை தளர்ச்சி மற்றும் செருப்பால் கொப்புளங்கள் கூட ஏற்பட்டு, அதனால் நீங்கள் அவதிப்பட்டு வரலாம். உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் போக்கும்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்

உங்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் நல்லதாகும். உப்பு தண்ணீரில் உள்ள மெக்னீசியம் அந்த நீரை உங்கள் சருமத்துடன் இணைக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும அணுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

தசை வலி மற்றும் தசைப்பிடிப்பிற்கு சிகிச்சையளிக்கும்

உப்பு தண்ணீரில் குளித்து வந்தால் தசைப்பிடிப்பு தொடராமல் இருக்கும். மேலும் கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் விளையாடுவதால் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் தசை வலிகள் மற்றும் பிடிப்புகளுக்கு சிகிச்சை அளித்திடும்.

Related posts

இயற்கை தரும் இதமான அழகு

nathan

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan

டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்! பாரம்பரியம் VS பார்லர் ! ஹெல்த் ஸ்பெஷல்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருப்பான ‘அந்த’ இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

nathan

முகத்தின் அழகை பராமரித்துக் கொள்ள இந்த டிப்ஸ படிங்க!…

sangika

சரும பிரச்சனைகளை தடுக்கும் பாதாம் எண்ணெய்!!

nathan

கவலை வேண்டாம். இதப்படிங்க … ‘கருவளையம்’ இல்லாம பாத்துக்குறது ரொம்ப முக்கியம்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா சருமம் பளபளப்பாக பழம், காய்கறி சாப்பிடுங்க!: மருத்துவர் கூறும் தகவல்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! கழுத்தில் உள்ள மருக்கள் தானாகவே உதிர இப்படி செய்துபாருங்கள்!!!

nathan