கை, கால், இடுப்பு, கழுத்து என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறோம். ‘ஒரு பயிற்சி எடுக்கவே எனக்கு நேரம் போதலை’ என்று புலம்புபவர்களுக்கு, போசு பால் என்ற ஒரு ஃபிட்னெஸ் கருவியைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பிரச்னைகளையும் தீர்க்கமுடியும்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த போசு பால் பயிற்சி, நம் உடலை சமநிலையில் வைத்திருக்கவும் வழிசெய்கிறது. சூப்பர்மேன் (Superman): போசு பாலின் நடுவில் வயிற்றுப் பகுதிபடுமாறு அதன் மீது படுக்கவும். இரண்டு கைகளையும் நேராக நீட்டி, கால்களை தரைமட்டத்தில் இருந்து தூக்கி ஓரிரு விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும்.
பிறகு, கைகளையும் கால்களையும் மடக்கி, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இது போல ஆரம்பத்தில் 15 முறை செய்யவேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்: இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், தொடைப் பகுதி, கால் தசைகள் வலிமை பெறும்.