25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
21 broad bean aloo poriyal
சைவம்

சுவையானஅவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்

பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும். எனவே வாரம் ஒருமுறையாவது சற்று வித்தியாசமான பொரியலை முயற்சி செய்ய முயல வேண்டும்.

அதிலும் உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காய் கொண்டு செய்யப்படும் பொரியலை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும். இங்கு அந்த அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அவரைக்காய் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி – 3 (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் அவரைக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து வதக்கி, அடுத்து அதில் உருளைக்கிழங்கு, அவரைக்காய் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.

பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் குறைவான தீயில் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

பின் உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், அதனை அப்படியே இறக்கலாம் அல்லது பொரியல் போன்று வேண்டுமானால், நீரை சுண்ட விட்டு இறக்கி விடலாம்.

அடுப்பில் இருந்து இறக்கிய பின், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி!!!

Related posts

ஓமம் குழம்பு

nathan

சத்தான முள்ளங்கி கீரை பொரியல்

nathan

ஓம மோர்க் குழம்பு

nathan

பிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா செய்ய…!

nathan

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

nathan

சோலே பன்னீர் கிரேவி

nathan

அரிசி பருப்பு சாதம்

nathan

மாங்காய் வற்றல் குழம்பு

nathan

சிம்பிளான… வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan