தேவையான பொருட்கள்
மட்டன் – 500 கிராம்
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் – 2 (பெரியது)
தக்காளி – 2 ( பெரியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 2 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் – 2 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 3/4 கப்
நீர் – தேவையான அளவு
மல்லித் தளை – கைப்பிடியளவு
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
பின்பு பிரஷர் குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
வெங்காயம் சேர்க்கவும்
பொன்னிறமாகும் வரை வதக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
பின்பு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
தக்காளி மசியும் வரை வேக வைக்கவும்
பின்பு அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
பின்பு சுத்தம் செய்த மட்டன் துண்டுகளைச் சேர்க்கவும்
பின்பு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
மட்டன் லேசாக பொன்னிறமாகும் வரை கிளறவும்
பின்பு அதனுடன் நீர் சேர்க்கவும்
நன்கு கிளறி வேக வைக்கவும்
மட்டன் வேகுவதற்குள் தேங்காயை வறுத்துக் கொள்ளலாம். தேங்காய் துருவலை ஒரு காய்ந்த கடாயில் எடுத்துக் கொள்ளவும்
பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்
பின்பு அதனை மிக்சியில் போட்டு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
மட்டன் வேக அதிகமாக நீர் தேவைப் பட்டால் சேர்த்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் வறுத்த தேங்காய் சேர்க்கவும்
10 நிமிடம் அதனை சிம்மில் வைக்கவும்
பின்பு அதனுடன் மல்லித் தளை சேர்த்து நன்கு கிளறவும்
மட்டன் குழம்பு ரெடி