factorsthatdonotpromotefemalefertility
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இவையெல்லாம் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்பது தெரியுமா?

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் காலம் என்றால் அது கர்ப்ப காலமும், பிரசவ காலமும் தான். ஆனால் அத்தகைய தாய்மையை இன்றைய தலைமுறையினர் பலரால் பெற முடிவதில்லை. இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

ஒருசில காரணிகள் தான் ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதித்து, குழந்தைப் பெற்றெடுக்கும் தன்மையை பாதிக்கிறது. அத்தகைய காரணிகள் என்னவென்று தெரிந்து கொண்டால், நிச்சயம் குழந்தைப் பெற்றெடுப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

சரி, இப்போது ஒரு பெண்ணின் கருவளத்தைப் பாதிக்கும் காரணிகள் என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

உடல் பருமன்

மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உடல் பருமன் நோய்களுக்கு மட்டும் வழிவகுப்பதோடு, குழந்தைப் பெற்றெடுப்பதிலும் இடையூறை ஏற்படுத்தும். எனவே பெண்கள் எப்போதும் தங்களது உடல் எடையைச் சிக்கென்று பராமரிக்க வேண்டியது அவசியம்.

வயது

வயதும் பெண்களின் கருவளத்தைப் பாதிக்கும். பொதுவாக 23-40 வயது வரை பெண்களால் கருத்தரித்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும். எனவே பெரும்பாலான தம்பதிகள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று குழந்தையைத் தள்ளிப் போடுகின்றனர்.

இப்படி பெண்கள் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போட்டால், அவர்களின் கருப்பை வயது அதிகரிக்க அதிகரிக்க பலவீனமாகி, பின் கருத்தரிப்பதில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

பாலியல் செயல்பாட்டில் ஆர்வம்

வயது அதிகரிக்க அதிகரிக்க பெண்களுக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைய ஆரம்பிக்கும். ஒருவருக்கு பாலியல் உறவில் நாட்டம் குறைந்தால், குழந்தைப் பெற்றெடுப்பதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

கணவனின் ஆரோக்கியம்

பெண்களுக்கு பாலியல் நாட்டம் குறைந்தால் மட்டும் குழந்தைப் பெற்றெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதில்லை, மனைவியை முழுமையாக சந்தோஷப்படுத்தாத கணவனாலும் குழந்தைப் பெற்றெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே திருமணத்திற்குப் பின் ஒவ்வொரு பெண்ணும், ஆணும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் காண்பிக்க வேண்டும்.

கெமிக்கல் கலந்த வீட்டுப் பொருட்கள்

பெண்களின் கருவளத்தை வீட்டில் பயன்படுத்தும் கெமிக்கல் கலந்த பொருட்களும் பாதிக்கும். அதிலும் கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள கெமிக்கல்களை சுவாசிக்கும் போது, அந்த வாயுக்கள் நேரடியாக கருவளத்தைப் பாதிக்கும்.

புகை/மது

புகை, மது இரண்டுமே சிறிதும் சந்தேகமின்றி கருவளத்தைப் பாதிக்கக்கூடியவை. அதிலும் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் டி.என்.ஏ-வை பாதித்து, பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் தீங்கு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை. எனவே புகை, மது இரண்டையுமே பெண்கள் தவிர்க்க வேண்டும்.

Related posts

சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

nathan

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு…

nathan

தீக்காயங்களுக்கு……!

nathan

தெரிஞ்சிக்கங்க…தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்….

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

nathan

பல நோய்கள் ஏற்பட காரணமாய் இருக்கும் மலச்சிக்கல்

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் இரத்த சுழற்சி குறைவாக இருக்குனு அர்த்தம்…

nathan

உங்களுக்கு மார்பு அடிக்கடி குத்துற மாதிரி இருக்கா? கட்டாயம் இதை படியுங்கள்….

nathan

இன்னும் ஒரே மாதத்தில் உங்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan