28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
11 cinnamontea
எடை குறைய

சூப்பர் டிப்ஸ்! எடையை குறைக்க காலையில் பட்டை இஞ்சி டீ குடிங்க…

எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி டீ குடியுங்கள். இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும்.

இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீயை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பட்டை – 2 இன்ச்
இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)
ப்ளாக் டீ இலைகள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 2 துண்டுகள்
புதினா – 5-6 இலைகள்
தேன் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.

நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும்.

பின்பு டீ இலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து பரிமாறினால், பட்டை இஞ்சி டீ ரெடி!!!

Related posts

உடல் எடையைக் குறைக்க

nathan

உடல் எடை குறைய உதவும் உணவுப் பழக்கம்

nathan

ஸ்லிம் அழகு பெற ஆசையா?

nathan

தொடை கொழுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகள்

nathan

நீங்கள் க்ரீன் டீ குடிச்சு உடல் எடையை குறைக்க ட்ரை பண்றீங்களா ? படிக்கத் தவறாதீர்கள்…

nathan

உடல் எடையை குறைக்க நினைக்கும்போது பொதுவாக செய்யும் தவறுகள்

nathan

எடை குறைப்பு இப்போ ரொம்ப ஈஸி

nathan

எப்படி உடல் எடையை குறைப்பது? இதோ அதற்கான வழிமுறைகள்

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika