22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
சரும பராமரிப்பு

மூக்கின் பக்கவாட்டில் கருப்பாக உள்ளதா?

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும்.

இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான்.

மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும்.

இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும், கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம்.

இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும்.

இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும்.

மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும்.

இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம்.

இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும்.

Related posts

சீன பெண்கள் அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

இளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புகள்

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan

கோடையில் சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள்

nathan

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்……

nathan

கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு!…

sangika

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

20 நிமிடங்களில் கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி?

nathan