28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
water1
மருத்துவ குறிப்பு

உங்க குடல்கள் ஆரோக்கியமாக செயல்பட தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! சூப்பரா பலன் தரும்!!

நம் உடலில் உள்ள முக்கியமான பல உறுப்புகளில் ஒன்று தான் குடல்கள். நாம் உண்ணும் உணவு செரிமானமாகி குடல்கள் வழியாகத் தான் செல்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் குடல்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குடல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல டிப்ஸ்கள் உள்ளது.

 

ஆரோக்கியமான குடல்களுக்கு என்னென்ன டிப்ஸ் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? நாங்கள் கூறப்போகும் டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றினால், குடல்களில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கலாம். இதனால் ஏற்படவிருக்கும் பல ஆரோக்கிய சிக்கல்கள் நீங்கும். தொற்றுக்களையும். நோய்களையும் தடுக்க வேண்டுமானால், பயனை அளிக்கப்போகும் கீழ்கூறிய டிப்ஸ்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.

 

ஆரோக்கியமான குடல்களைப் பெற, இதோ உங்களுக்கான அந்த 8 டிப்ஸ். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி ஆரோக்கியமான குடல்களுக்கான உணவுகள், ஆரோக்கியமான செரிமான அமைப்பிற்கான உணவுகள், சிறப்பான செரிமான ஆரோக்கியத்திற்கான டிப்ஸ் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள் என இந்த டிப்ஸ்களை தரம் பிரிக்கலாம். தொடர்ந்து படியுங்கள்…

தண்ணீர்

நீர்ச்சத்துடன் விளங்கினால் நீங்கள் நினைப்பதையும் மீறி, பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படும். நீர்ச்சத்துடன் கூடிய அணுக்களால் இயக்க உறுப்புகளில் தாக்கம் இருக்காது. மேலும் நச்சுக்களை தண்ணீர் வெளியேற்றும். அதேப்போல் குடல் மற்றும் பெருங்குடல் போன்ற உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் தண்ணீர் உதவிடும்.

தோல் நீக்கப்பட்ட இறைச்சியை உண்ணவும்

தோல் நீக்கப்பட்ட இறைச்சியுடன் பல உடல்நல பயன்கள் தொடர்பில் உள்ளது. அவைகள் செரிமானத்தை மேம்படுத்தி, குடல்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். அதிலுள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தோல் நீக்கிய கோழி மற்றும் மீன் போன்ற இறைச்சி அதிமுக்கிய புரதத்தை அளிக்கிறது. இதனால் செரிமானம் மேம்பட்டு வயிறு, கணையம் மற்றும் ஈரல் போன்ற பல உறுப்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.

மாட்டிறைச்சியை தவிர்க்கவும்

மாட்டிறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமாக உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை ஊக்குவிக்கும். இதனால் உங்கள் இதயகுழலிய ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும். இதனை அதிகமாக உட்கொண்டால், செரிமானமின்மையும் ஏற்படும்.

ப்ரோ-பையோடிக்ஸ் சேர்த்துக் கொள்ளவும்

தயிர் போன்ற ப்ரோ-பையோடிக்ஸால் செரிமான அமைப்பிற்கு அருமையான பயன்கள் உள்ளது. தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியா வளமையாக உள்ளதால், நாம் உண்ணும் உணவில் இருந்து அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் இது உதவிடும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது

அளவுக்கு அதிகமாக உண்பதால் நீங்கள் நினைப்பதை விட அதிக தீமைகள் இருக்கிறது. செரிமான என்ஸைம்களை கையை மீறி வெளியேறுவதால், இயல்பான செரிமானத்திற்கு அது தடையாக இருக்கும். நமக்கு வாய்வு பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் அளவுக்கு அதிகமாக உண்பதே காரணமாக உள்ளது.

அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்

அதிக நார்ச்சத்துள்ள உணவுகளால் நம் செரிமானம் மேம்படும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளால் உடல் எடை குறைவும் ஏற்படும். உடல் கழிவுகளை வெளியேற்றுவதிலும், மலச்சிக்கலை தடுப்பதிலும் சிறந்து செயல்படும். மேலும் குடலின் மீதான அழுத்தத்தை நீக்கும். அதிக நார்ச்சத்துள்ள பல உணவுகளில் எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அவைகள் குடல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

ஆரோக்கியமான செரிமானத்திற்கு சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, குடல்களை சீராக செயல்படுத்த வைக்க வேண்டுமானால், சீரான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகும்.

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்

இதனை தனியாக சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. பழங்களிலும் காய்கறிகளிலும் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் வளமையாக உள்ளது என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதனால் நம் உடலில் உள்ள பல உறுப்புகளுக்கு பல விதமான பயன்கள் கிடைக்கிறது.

Related posts

கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க தெரியுமா!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஒற்றைத்தலைவலி – காரணங்கள்… தீர்வுகள்!

nathan

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

ஓர் ஆணிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த 8-ல், உங்களிடம் எத்தனை இருக்கிறது?

nathan

ஆண்களின் பழைய வாழ்க்கையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தைகளை முத்தமிட கூடாது என பெரியவர்கள் கூறுவதற்கு இதுதான் காரணம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இதய நோய்கள் வராமல் தடுக்கும் அதி சக்தி வாய்ந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

இந்த பூவின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா ??? அப்ப உடனே இத படிங்க…

nathan

இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan