29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
29 cough
மருத்துவ குறிப்பு

சூப்பரா பலன் தரும்!! இருமலில் இருந்து உடனடி தீர்வு பெற எளிய டிப்ஸ்…

குளிர்காலம் என வந்துவிட்டாலே சளி, காய்ச்சல் என நாம் அவதிப்படுவது சகஜம் தான். காய்ச்சல் வருவதற்கான பொதுவான அறிகுறிகளே சளியும் இருமலும். இருமல் வந்துவிட்டால், குளிர்காலத்தில் நீங்கள் போட்டு வைத்திருந்த திட்டங்களை எல்லாம் குலைத்து விடும். தொடர்ச்சியாக இருமல் வந்தால், உங்கள் நெஞ்சில் வலி ஏற்பட்டு உடலும் சோர்வடைந்து விடும். இருமல் வருவதற்கு காய்ச்சலைத் தவிர அலர்ஜிகள், ஆஸ்துமா, வறண்ட காற்று மற்றும் புகையையும் கூட காரணமாக சொல்லலாம்.

இருமலில் இருந்து உடனடி நிவாரணத்தை பெறுவதற்கு பலரும் அல்லோபதி சிகிச்சைகளை நாடி செல்கின்றனர். அது தான் மிகச்சிறந்த தேர்வு எனவும் நினைக்கின்றனர். ஆனால் அதை விட சிறந்த இயற்கை சிகிச்சைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவைகளை பயன்படுத்தினால் இருமலில் இருந்து உடனடி தீர்வை காணலாம்.

எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இருமலை குணப்படுத்த சில பொருட்கள் உள்ளது. அவைகளை உங்கள் சமயலறையில் இருந்தே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கடுமையான மற்றும் தீவிரமான இருமலை கட்டுப்படுத்த வாழ்வு முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும். இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்.

நீர்ச்சத்துடன் இருங்கள்

குளிர்காலம் என்றாலே வறண்ட காலமாகும். அதனால் இருமலை நீக்க வேண்டுமென்றால், அதிகமான அளவில் வெந்நீரையும், இதர பானங்களையும் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள்.

தேன்

தேன் என்பது தொண்டை வலியை குணப்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் இருமலில் இருந்து இது உடனடி நிவாரணத்தை பெற உதவிடும்.

வெந்நீர் குளியல்

இருமலுக்கான உடனடி வீட்டி சிகிச்சைகளில் இதுவும் ஒன்றாகும். வெந்நீரில் குளியல் போட்டால் உடல் கழிவுகள் வெளியேறுவது சுலபமாகும். இதனால் சலிக்கு மட்டுமல்லாது அலர்ஜிகள் மற்றும் ஆஸ்துமாவால் ஏற்படும் இருமலுக்கும் அது நிவாரணத்தை அளிக்கும்.

உப்பு தண்ணீரை கொப்பளித்தல்

இருமலை போக்க இதுவும் ஒரு வழியாகும். வெதுவெதுவன இருக்கும் உப்பு தண்ணீரில் வாயை கொப்பளித்து உடனடி நிவாரணத்தை பெற்றிடுங்கள்.

மசாலா டீ

இந்த டீயில் பாலும் மஞ்சளும் கலக்கப்பட்டிருக்கும். இருமலை குறைக்க இது சிறந்த வழியாகும். இது இயற்கையான சிகிச்சை என்பதால், இதனை பெரியவர்களும் குழந்தைகளும் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை, லவங்கப்பட்டை மற்றும் தேன்

கொதிக்க வைத்த தேனுடன் லவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சையை சேர்த்துக் கொள்ளவும். இருமலை போக்க இந்த சாறு மிகவும் உதவிடும். சளியை குணப்படுத்தவும் கூட இதை பயன்படுத்தலாம்.

உப்பு தண்ணீர் மற்றும் பூண்டு

இருமலுக்கான மிக பழமையான வைத்தியம் இது. பூண்டுகளை நசுக்கி உப்பு தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் என்பது தொற்றுக்களுக்கு கிருமி நாசினிகளாக விளங்குவதால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தேனும் பிராந்தியும்

உடலின் வெப்பநிலை அதிகரிப்பதற்காக பிராந்தியை பயன்படுத்தலாம். சளியை எதிர்த்து போராட தேனை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் போதும் இந்த மாயத்தை நிகழ்த்திட.

நெல்லிக்காய்

பொதுவாக ஏற்படும் சளியை போக்க சிறந்த வழிகளில் ஒன்று தான் நெல்லிக்காய். வரும் முன் காப்பது தானே சிறந்தது. நெல்லிக்காய் என்பது நம் உடலை பாதுகாக்கும் கடுமையான நோய் எதிர்ப்பு பண்பேற்றியாக விளங்கும்.

மூலிகை டீ

தீவிரமான இருமலை எதிர்த்து போராட சிறந்த பொருட்களாக விளங்குகிறது துளசி, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு. இவைகளை பயன்படுத்தி டீ தயார் செய்து அதனை சூடாக பருகிடுங்கள்.

Related posts

ஆண்களிடம் பெண்கள் முதலில் இதை தான் பார்ப்பார்களாம்!

nathan

முருங்கைக்கீரை குழந்தையின்மை குறை போக்கும்!

nathan

உங்களுக்கு தெரியுமா உறக்கத்தில் எத்தனை வகை., எத்தனை நிலைகள் உள்ளது?

nathan

கவணம் ! நெஞ்சுச்சளியை கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்தது ..!

nathan

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை

nathan

அதென்ன பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்

nathan

எச்சரிக்கை! சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு உடல் கோளாறுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!

nathan

கொலஸ்ட்ரால் குறைக்க…

nathan