24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
14 1431587449 3notmoisturisingyourskin
முகப் பராமரிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள்!!!

தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களின் அழகை அதிகரிக்க விரும்புகின்றனர். ஆனால் அதற்கான போதிய பராமரிப்புக்களை முறையாக அன்றாடம் பின்பற்றுவதில்லை.

 

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமத்தைப் பார்த்தால், அதிக அளவில் பாதிப்படைந்திருப்பது நன்கு தெரியும். இதற்கு அவர்கள் தங்களின் சருமத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம்.

 

எனவே ஆண்களே நீங்கள் அழகாக மாற ஆசைப்பட்டால், சலூன் சென்று உங்கள் அழகை அதிகரிக்காமல், அன்றாடம் ஒருசில பராமரிப்புக்களை தவறாமல் பின்பற்றி வந்தாலே, நல்ல பலனைப் பெறலாம்.

 

சன் ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது

ஆண்கள் சன் ஸ்க்ரீன் க்ரீம்களை அடிக்கடி பயன்படுத்தமாட்டார்கள். அப்படியே பயன்படுத்தினாலும், கண்ணை மூடிக் கொண்டு ஏதோ ஒரு SPF குறைவாக உள்ள சன் ஸ்க்ரீன் க்ரீமை பயன்படுத்துவார்கள். ஆனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், SPF அதிகம் உள்ள சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்துவதோடு, வெளியே செல்லும் ஒரு மணிநேரத்திற்கு முன்பே தடவிக் கொள்ள வேண்டும். வேண்டுமானால், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சருமத்திற்கு தடவி செல்லலாம்.

ஆன்டி-ஏஜிங் க்ரீம் பயன்படுத்தாதது

ஆன்டி-ஏஜிங் க்ரீமை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற எதுவும் இல்லை. ஆண்களுக்கும் முதுமைத் தோற்றம் வரும். அதை மறைக்கவும், போக்கவும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைப் பயன்படுத்தினால், முதுமைத் தோற்றத்தைத் தடுக்கலாம்.

 

மாய்ஸ்சுரைசிங் பயன்படுத்தாதது

ஆண்கள் பொதுவாக எந்த ஒரு க்ரீமையும் சருமத்திற்கு தடவ விரும்பமாட்டார்கள். இதனால் சருமம் வறட்சியடைந்து, அதிக பாதிப்பிற்குள்ளாகி, கடினமானதாக இருக்கும். எனவே ஆண்களே உங்கள் சருமம் மென்மையாக அழகாக இருக்க வேண்டுமானால், தினமும் மாய்ஸ்சுரைசர் தடவி வாருங்கள். இதனால் சரும வறட்சியைத் தடுக்கலாம்.

வறட்சியான ஷேவிங்

சில ஆண்கள் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தாமல், வறட்சியான ஷேவிங்கை மேற்கொள்வார்கள் ஆனால் இப்படி செய்தால், சருமம் தான் பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் அதிக வெட்டு காயங்கள் ஏற்பட்டு, அதனால் தழும்புகள் விழும். ஆகவே எப்போதும் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்ய வேண்டாம். மேலும் ஷேவிங் முடிந்த பின்னர், ஆப்டர் லோஷனை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

சோப்புக்களை பயன்படுத்துவது

பொதுவாக ஆண்கள் தங்களின் முகத்திற்கு சோப்புக்களை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் சோப்புக்களை அதிகம் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, முகம் வறட்சியடைவதோடு, சரும செல்களும் அதிகம் பாதிக்கப்படும். எனவே குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள்.

ஸ்கரப் பயன்படுத்தாமல் இருப்பது

பெண்களின் சருமத்தில் மட்டும் அழுக்குகள், இறந்த செல்கள் சேர்வதில்லை. ஆண்களின் சருமத்திலும் இவை சேரும். எனவே ஆண்கள் அவ்வப்போது முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். வீட்டில் இருக்கும் சர்க்கரை அல்லது ஓட்ஸ் கொண்டே ஸ்கரப் செய்யலாம். முக்கியமாக ஸ்கரப் செய்யும் முன், முகத்தை நீரில் கழுவி, பின்னர் தான் ஸ்கரப் செய்ய வேண்டும்.

சரியாக தண்ணீர் குடிப்பதில்லை

அழகு என்று வரும் போது அதில் தண்ணீரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், அது சரும செல்கள் புத்துணர்ச்சியோடு வைப்பதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவோடு வைத்துக் கொள்ளும். இதற்கு காரணம் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவது தான். எனவே தினமும் தவறாமல் 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம்.

Related posts

5 நிமிடத்தில் முகத்திற்கு பொலிவு தரும் வாழைப்பழம் !!

nathan

வாரத்துக்கு 2 முறை உப்தான் ஃபேஸ் பேக் போடுவதால் பெறும் நன்மைகள்

nathan

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

முக சுருக்கம் வருவதை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

nathan

அழகாகவும் இளமையாகவும் ஜொலிக்க இத ட்ரை பண்ணுங்க..!

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள்!

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

nathan

முகத்துக்கு அழகு புருவம்

nathan