தேவையான பொருட்கள்:
கருவாடு – ஒரு கோப்பை
கத்திரிக்காய் – 3
மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கருணைகிழங்கு – 250 கிராம்
சீரகத் தூள் – அரைத் தேக்கரண்டி
வறுத்த அரிசி மாவு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – அரைக் கோப்பை
வெங்காயம் – 1
தக்காளி – 1
துறுவிய தேங்காய் – அரைக் கோப்பை
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து.
கடுகு – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
செய்முறை:
கருவாடை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை, தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடு வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து 3 கோப்பை தண்ணில் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், வெங்காயத்தை அரைத்து, உப்பு, தக்காளியை சேர்த்து புளி தண்ணிரில் கலக்கி வைக்க வேண்டும். பூண்டை நசுக்கி கொள்ள வேண்டும். கத்திரிக்காயை நறுக்கி கொள்ள வேண்டும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு நன்கு வறுத்து கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும். கூடவே கருவாடையும் போட்டு சிறிது நேரம் வதக்கி எல்லாத் தூள்வகைகளையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு கலக்கி வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி, கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.