28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
10 im
மருத்துவ குறிப்பு

உங்களுக்குதான் இந்த விஷயம்! இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!

சிலர் தங்கள் செயல்களுக்குத் தாங்களாகவே ஒரு வரைமுறையை வகுத்துக் கொண்டு, அவற்றைப் பழக்கவழக்கங்களாக மாற்றிக் கொண்டிருப்பார்கள். அது எவ்வளவு நல்ல பழக்கமானாலும் சரி, எவ்வளவு கெட்ட பழக்கமானாலும் சரி… “இதாம்ப்பா எங்க பழக்கம். இதையெல்லாம் எங்களால் மாற்ற முடியாது.” என்று கூறுவார்கள்.

பல விஷயங்களை அவர்களே கடைப்பிடித்திருப்பார்கள்; சில விஷயங்களை யாராவது சொல்லியும் கொடுத்திருப்பார்கள். அப்படித்தான் உணவுப் பழக்கமும். ஆனால் இது கொஞ்சம் ஆபத்தானது. சரியான உணவுப் பழக்கம் இல்லையென்றால், அது உடலைக் கடுமையாகப் பாதிக்கும் விஷயமாக மாறிவிடும்.

 

பழக்கவழக்கம் என்ற பெயரில் அவற்றைச் செய்து கொண்டே இருந்தால், அது உடல் நலத்துக்குக் கேடாக மாறும். குறிப்பாக, இரவு உணவுக்குப் பின் நாம் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட சில பழக்கங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

நடைப்பயிற்சி

பொதுவாகவே நாம் இரவு உணவுக்குப் பின் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஆனால், இரவு சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது. மேலும், சாப்பிட்ட பின் நடப்பதால் சிலருக்கு வயிற்று வலியோ, தலைச்சுற்றலோ ஏற்படும்.

உங்க உடல் எடையை குறைக்கவும் இன்னும் பிற நன்மைகளை பெற முன்னோர்கள் குடித்த இந்த ஜூஸை குடியுங்கள்! உங்க உடல் எடையை குறைக்கவும் இன்னும் பிற நன்மைகளை பெற முன்னோர்கள் குடித்த இந்த ஜூஸை குடியுங்கள்!

அதிக நீர் குடிப்பது

அதிக நீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான். ஆனால் இரவு உணவுக்குப் பின் அதிகமாக நீர் குடித்தால், செரிமானம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

மூன்றாம் அலையை ஏற்படுத்தப் போகும் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ்: அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?மூன்றாம் அலையை ஏற்படுத்தப் போகும் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ்: அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

பழங்கள் உண்பது

நம்மில் பெரும்பாலோனோர் இரவு உணவுக்குப் பின் ஏதாவது பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்போம். ஆனால், ஏற்கனவே சாப்பிட்டு வயிறு ‘திம்’மென்று இருக்கும் போது, பழம் சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்படுகிறது.

தாய்மார்கள் ஏன் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது தெரியுமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தாய்மார்கள் ஏன் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது தெரியுமா? சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ப்ரஷ் செய்வது

இரவு உணவுக்குப் பின் உடனடியாக பல் துலக்குவது நல்லதல்ல. உணவுகளை மென்று சாப்பிடுவதற்காக, பற்களுக்கு நிறைய வேலைகள் கொடுப்பதால், அது மீண்டும் வலுப்பெற சிறிது நேரமாகும். குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே பல் துலக்க வேண்டும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் இரவு உணவுக்குப் பின் புகைப்பது அதைவிடக் கெடுதலானது. புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகளுக்கும் இப்பழக்கம் உடனடி கேரண்டி கொடுக்கும்.

டீ குடிப்பது

இரவு சாப்பிட்ட பின் டீ குடிப்பதால், அதிலுள்ள பாலிஃபீனால்கள் நாம் சாப்பிட்ட உணவிலுள்ள இரும்புச்சத்து எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விடுகின்றன. செரிமானமும் பாதிக்கப்படுகிறது.

குளிப்பது

இதுவும் நடைப்பயிற்சி போலத்தான். இரவு உணவுக்குப் பின் கை, கால்களிலேயே இரத்தம் பாய்வதால், வயிற்றுக்குப் போக வேண்டிய இரத்தம் குறைந்து விடுகிறது. இதனால் செரிமானம் பாதிக்கப்படுகிறது.

வண்டி ஓட்டுவது

இரவு உணவுக்குப் பின் வண்டி ஓட்டுவதும் நல்லதல்ல; அதே இரத்த ஓட்டப் பிரச்சனை தான்! மேலும், சாப்பிட்ட உடன் வண்டி ஓட்டுவதிலும் அதிக கவனம் செலுத்த முடியாது. சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின் ஓட்டலாம்.

உடற்பயிற்சி செய்வது

இரவு சாப்பிட்டதும் உடற்பயிற்சி செய்வது கண்டிப்பாக நல்லதல்ல. இதனாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சரியாகச் செரிமானம் ஆகாமலும் போய்விடும்.

உடனடியாகத் தூங்குவது

இரவு சாப்பிட்ட பின் உடனடியாகத் தூங்கச் செல்வதால், செரிமானப் பிரச்சனைகள் மட்டுமல்ல, பல வாயுத் தொந்தரவுகளும் ஏற்படக் கூடும். இதனால் உடல் எடையும் தாறுமாறாக அதிகரிக்கும். எனவே, இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையே குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் சூடு, கண்எரிச்சலை உடனடியாக போக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்!

nathan

நம்மோடு எடுத்து செல்லகூடிய கையடக்க டிஜிட்டல் லாக்கர்

nathan

தொிந்துகொள்ளுங்கள்! காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்! தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா?

nathan

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் வெங்காயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் இயக்கமில்லாத பெண்களும்.. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்…

nathan

உங்களுக்கு தெரியுமா கண் பார்வையை தெளிவாக்க தினமும் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள்

nathan