27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
1 oils
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!!!

அழகை அதிகரித்து வெளிக்காட்ட போடப்படுவது தான் மேக்கப். அத்தகைய மேக்கப் போட பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல் அதிகம் இருப்பதால், அவை சருமத்தில் அதிக நேரம் இருந்தால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

 

ஆகவே என்ன தான் மேக்கப் போட்டாலும், இரவில் படுக்கும் முன் அதனை தவறாமல் நீக்கிவிட வேண்டும். அதற்காக கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்தாதீர்கள். வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டே மேக்கப்பை நீக்கலாம்.

 

இங்கு மேக்கப்பை நீக்க உதவும் அந்த நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பயன்படுத்தி வந்தால், சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

எண்ணெய்கள்

எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் போன்றவற்றைக் கொண்டு தினமும் தூங்கும் முன், காட்டனில் எண்ணெயை நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்.

கற்றாழை ஜெல்

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 3 டீஸ்பூன் ஆலிவ்ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 2 நிமிடம் கழித்து காட்டன் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் இந்த செயலை செய்ய வேண்டும். இதனால் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து பால் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் காட்டன் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்படுவதோடு, சருமமும் பொலிவாகும்.

பால்

காட்டனில் பாலை நனைத்து, முகத்தை துடைத்து எடுத்து, சிறிது நேரம் கழித்து, காட்டனை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள மேக்கப் நீக்கப்படுவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

தயிர்

தயிரை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் காட்டனை நீரில் நனைத்து துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மேக்கப் முற்றிலும் நீங்கும்.

ஹேர் கண்டிஷனர்

வெளியூர் செல்லும் போது, மேக்கப் ரிமூவரை மறந்துவிட்டால், அப்போது ஹேர் கண்டிஷனர் இருந்தால், அதனை முகத்தில் தடவி, பின் காட்டனை நீரில் நனைத்து துடைத்து எடுக்கலாம். இதன் மூலமும் சரும ஆரோக்கியம் மேம்படும்.

பேபி ஷாம்பு

பேபி ஷாம்பு சென்சிடிவ் மற்றும் வறட்சியான சருமத்தினருக்கு ஏற்ற அருமையான ஒரு மேக்கப் ரிமூவர். அதற்கு பேபி ஷாம்பை சருமத்தில் தடவி, பின் காட்டன் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

Related posts

புத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ்

nathan

அற்புதமான எளிய தீர்வு! இரவு தூங்கும் முன் இப்படி செய்தால் சீக்கரம் வெள்ளையாவீங்களாம்! மறக்காம ட்ரை பண்ணுங்க

nathan

வீட்டிலேயே பேசியல் செய்வது எப்படி?

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

beauty tips tamil,பளிச்சென முகம் பிரகாசிக்க..

nathan

இந்த ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிச்சா.. நீங்க சீக்கிரம் வெள்ளையாவீங்க..!

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? அதை மறைக்க சில டிப்ஸ்…

nathan

உங்க முகத்துல எண்ணெய் வழியுதா? இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan

Tomato Face Packs

nathan