29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
sl1354
அசைவ வகைகள்ஆரோக்கிய உணவு

லாலி பாப் சிக்கன்

என்னென்ன தேவை?
லெக் பீஸ் – 12 பீஸ்
எலுமிச்சை – 2
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
சோள மாவு – 2 மேஜைக் கரண்டி
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும். இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.

பிறகு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு வறுத்து எடுக்கவும். நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கறி லாலி பாப் தயார்.sl1354

Related posts

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம் ..!

nathan

தெரிஞ்சிக்கங்க… இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டாலாமா? இனி தயவு செய்து இந்த பிழையை மட்டும் இனி செய்யாதீர்கள்!

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அதிக ஆரோக்கிய பலன்களை தரும் வாழைப்பழம்கள்

nathan

சுடச்சுட பூரி செய்து சாப்பிடலாம்

nathan

சுவையான கேரளா சிக்கன் ப்ரை

nathan

சூப்பரான கேரட் கீர்

nathan

தெரிஞ்சிக்கங்க… ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் அவரைக்காய்

nathan

மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கா! தெரிந்துகொள்வோமா?

nathan

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது பசலைக்கீரை

nathan