28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
7 pregnant
மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

ஓர் உயிரை சுமந்து, அதனை வெற்றிகரமாக பெற்றெடுக்கும் வரை ஒர் பெண் மனதளவிலும், உடலளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒருசில செயல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதில் தினமும் வீட்டு வேலைகளை செய்வது, வாக்கிங் செல்வது மற்றும் சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, ஏன் வாக்கிங் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் எனத் தெரியுமா? தெரியாதெனில், தொடர்ந்து படியுங்கள்.

மன அழுத்தம் நீங்கும்

கர்ப்ப காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற இறக்கமான மனநிலை இருக்கும். அதில் சில நேரங்களில் மிகவும் மன வேதனையை சந்திக்க நேரிடும். இதனை தினமும் வாக்கிங் செல்வதன் மூலம் சரிசெய்யலாம். எப்படியெனில் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் மூளையில் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோர்பின்கள் வெளியிடப்படும்.

பிரசவத்துக்கு பிறகு அதிகரிக்கும் உங்க உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நீங்க ‘இத’ செஞ்சா போதுமாம்.! பிரசவத்துக்கு பிறகு அதிகரிக்கும் உங்க உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நீங்க ‘இத’ செஞ்சா போதுமாம்.!

மலச்சிக்கல் குறையும்

பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வாக்கிங் மேற்கொள்வதால், இந்த மலச்சிக்கல் பிரச்சனை குறையும். எனவே தினமும் 15-20 நிமிடம் வாக்கிங் மேற்கொள்ளுங்கள்.

 

சோர்வு தடுக்கப்படும்

கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகுந்த சோர்வையும், பலவீனத்தையும் பெண்கள் சந்திப்பார்கள். இக்காலத்தில் போதிய அளவில் ஓய்வை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது நல்லதல்ல. எனவே சிறு தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் சோர்வு தடுக்கப்பட்டு, உடல் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.

 

இரத்த அழுத்தம் குறையும்

பொதுவாக கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இரத்த அழுத்தமானது சீரான அளவில் பராமரிக்கப்படும்.

சுகப்பிரசவம் நடைபெறும்

கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொண்டால், இடுப்பு தசைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, பிரசவம் சுமூகமாகவும், மிகுந்த வலியின்றியும் இருக்கும்.

நல்ல தூக்கம்

கர்ப்ப காலத்தில் பெண்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால் தினமும் 30 நிமிடம் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

உடல் எடை பராமரிக்கப்படும்

கர்ப்பிணிகள் தினமும் வாக்கிங் மேற்கொள்வதன் மூலம், தாயின் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுவதோடு, குழந்தையின் எடையும் கட்டுப்படுத்தப்படும். கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், பிரசவத்தின் போது சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆகவே குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுக்க வேண்டுமானால், தினமும் வாக்கிங் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Related posts

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

nathan

கர்-ப்பத்தைத் தடுக்க நீண்ட கால க-ருத்தடை சாதனம்

nathan

சூப்பர் டிப்ஸ்! காயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும்….

nathan

பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை வீட்டிலேயே குணப்படுத்தும் உணவுகள் எது தெரியுமா?

nathan

போலியோ சொட்டுமருந்து கட்டாயம் அளிப்போம்!

nathan

எச்சரிக்கை! பெண்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாத 6 முக்கிய அறிகுறிகள்

nathan

இரட்டைக் குழந்தைகள் உருவாவது எப்படி?

nathan

கிரீன் டீயை எடுத்து கொண்டால் இந்த ஆபத்தை ஏற்படுத்துமாம்! தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்பம் முதல் பிரசவம் வரை சந்திக்கும் இன்னல்கள்

nathan