25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
04 kanchipuram idli
​பொதுவானவை

சுவையான காஞ்சிபுரம் இட்லி

இட்லியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் இட்லி. இந்த இட்லி மிகவும் ஆரோக்கியமான, அதே சமயம் மிகுந்த சுவையுடையது. இது காஞ்சிபுரத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.

இந்த இட்லியை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு அந்த காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

காலிஃப்ளவர் பாப்கார்ன்காலிஃப்ளவர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1/4 கப்
அரிசி – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/4 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1/8 கப்
முந்திரி – 100 கிராம்
பச்சை மிளகாய – 2 (நறுக்கியது)
தேங்காய் – 1/2 கப் (துருவியது)
இஞ்சி – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பபிலை – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மொறுமொறுப்பான… பன்னீர் 65மொறுமொறுப்பான… பன்னீர் 65

முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும்.

மணமணக்கும்… சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்புமணமணக்கும்… சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு

பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி ரெடி!!!

Related posts

ஆக்கப்பூர்வமானதாக மாற்றுங்கள்

nathan

சூப்பரான பன்னீர் கார்ன் குருமா

nathan

பைனாப்பிள் ரசம்

nathan

மாமியாரிடம் மருமகள் கூறும் பொய்கள்

nathan

நண்டு ரசம்

nathan

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?

nathan

காராமணி சுண்டல்

nathan

கத்திரி வாழைப்பூ தொக்கு

nathan

கண்டதிப்பிலி ரசம்

nathan