மஞ்சளுக்கு எப்போதுமே முக்கிய இடமுண்டு, மஞ்சள் மகாலட்சுமிக்கு உகந்தது என கூறுவார்கள்.
அத்தகைய மஞ்சளை பூசி குளிக்கும் பெண் மகாலட்சுமியை போன்ற முக வசீகரத்தையும், பொலிவையும், மகாலட்சுமியின் குணநலன்களையும், அருளையும் பெறுகிறாள் என சாஸ்திரம் கூறுகிறது.
இதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் உண்டு, அவை என்ன என்று பார்க்கலாம்.
* நம் உடலில் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளை நீக்கும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.
* கருப்பை வாய் புற்றுநோய் என்ற நோயை பெண்களுக்கு உண்டாக்கும் யூமன் பப்பிலோமா வைரஸ் தாக்கத்தை குறைக்க மஞ்சள் உதவுகிறது.
* மஞ்சள் பூசி குளித்து வந்தால் நம் தோல்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
எப்படி பயன்படுத்தலாம்?
* கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து உடல் முழுவதும் தடவி குளித்துவந்தால் சருமம் அழகு பெறும்.
* சந்தன பொடியுடன் மஞ்சள், பன்னீர் கலந்து முகத்தில் தடவி உலரவிட்டு 10 நிமிடம் கழித்து முகம் கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
* பாலில் மஞ்சள் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்துவர முகத்தில் உள்ள கருமை நிறம் மாறும்.
* தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.
* எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவி வந்தால் வெயிலினால் மாறிய சருமத்தின் நிறம் பொலிவு பெறும் .
நம் ஆரோக்கியத்திலும், அழகிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய மஞ்சளை நாம் பயன்படுத்தி பலன் அடைவோம்.