வாயில் கசப்பான அல்லது கெட்ட சுவை ஏற்பசுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காரமான அல்லது புளிப்பு உணவுகளை சாப்பிடுவதாலும் வாயில் கசப்பு ஏற்படலாம். ஆனால், வாய்க் கசப்பு நீண்ட நேரம் நீடித்தாலும், அடிக்கடி ஏற்பட்டாலும் அது ஆரோக்கியக் குறைவுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
சுவை என்பது மிகவும் மிருதுவான உணர்வு, பல் சுகாதாரம், நீர்ச்சத்து குறைப்பாடு என பல காரணங்களால் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கும், நோயுற்றவர்களுக்கும் வாய்க் கசப்பு ஏற்படுவது சகஜம், ஆனால் தொடர்ந்து கசப்பு சுவை இருந்தால், அது கவனத்தை சிதறடிக்கும்.
தொடர்ச்சியான கசப்பான சுவைக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்னால் பல்வேறு காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக சில எளிய கை வைத்தியங்களை மேற்கொண்டு வாய்க் கசப்பை போக்கலாம்.
சாப்பிடும்போது அல்லது குடிக்கும்போது பிற சுவைகளை அடையாளம் காண்பதற்கு கடினமாக இருக்கலாம். பல் துலக்கிய பிறகும் அந்த சுவை மாறாமல் இருக்கலாம். கசப்பு சுவையுடன். வேறு அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பொறுத்து இதற்கான சிகிச்சை மாறுபடும்.
வாயில் கசப்பான சுவை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம் பின்வருமாறு:
பற்களை துலக்குதல், பல் இடுக்கில் இருக்கும் துணுக்குகளை நீக்குவது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மவுத்வாஷைப் பயன்படுத்துதல் போன்றவை வழக்கமான பல் பராமரிப்பு முறைகள். மவுத்வாஷ் உள்ளிட்ட பல் பராமரிப்பு பொருட்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.
உமிழ்நீர் வாயில் சுரந்துக் கொண்டே இருக்க சர்க்கரை இல்லாத சுயிங்கத்தை மெல்லலாம்.
அதிக அளவு நீர் குடிக்க வேண்டும்.
நாள் முழுவதும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
எண்ணெய் அதிகம் உள்ள அல்லது காரமான உணவுகளை உண்ணுதல், புகையிலை பொருட்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைக் குறைப்பதும் வாய்க் கசப்பு போக சுலபமான வழிமுறைகள்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து வாயை கொப்பளித்தால் வாய்க் கசப்பு நீங்கிவிடும்.