சிவப்பு சந்தனத்தில் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே இவற்றைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க சிவப்பு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து தெரிந்து, உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான சருமம்
உங்கள் சருமம் ஆரோக்கியமான முறையில் காட்சியளிக்க வேண்டுமானால், சரும செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டியது அவசியம். அச்செயலை சிவப்பு சந்தனம் சிறப்பாக செய்யும். எனவே 1-2 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தினமும் முகம், கை, கால்களுக்கு தடவி வர, உங்கள் சருமம் நன்கு ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
பொலிவான முகம்
உங்கள் முகம் எப்போதும் பொலிவிழந்து சோர்வாக காணப்படுகிறதா? அதைத் தடுக்க சிவப்பு சந்தனத்தைப் பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது பாலை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
தழும்புகள் மறையும்
பருக்களால் வந்த தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு எளிதில் போக்கலாம். அதற்கு 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலில், 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 4 டீஸ்பூன் சந்தனப் பொடி சேர்த்து கலந்து தினமும் முகத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.
இறந்த செல்கள் நீங்கும்
சிவப்பு சந்தனம் சருமத்தில் சொரசொரவென்று இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்
சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் அந்த எண்ணெய் பசையை நீக்க, 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில், 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து, எண்ணெய் பசை நீங்கும்.
சரும கருமை நீங்கும்
வெயிலில் அதிகம் சுற்றி சருமம் கருமையாக இருந்தால், அதனை எளிதில் நீக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு தினமும் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியில், தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகம், கை, கால்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பிம்பிள் நீங்கும்
சிலர் பிம்பிள் அல்லது முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தினமும் சிவப்பு சந்தனப் பொடியை நீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வர, அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
முதுமை தோற்றம் தடுக்கப்படும்
சிலருக்கு இளமையிலேயே சரும ஒருவித சுருக்கத்துடன் காணப்படும். இதனைத் தடுக்க சிவப்பு சந்தனம் உதவும். அதற்கு 4 டீஸ்பூன் சிவப்பு சந்தனப் பொடியில் 2 டீஸ்பூன் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி ஊற வைத்து கழுவ சருமத்தில் உள்ள