25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
02 1467448652 9v
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருக்கலைப்பு பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

சில சமயம் குழந்தை வேண்டாம் என கருத்தடுப்பு பாதுகாப்பு மேற்கொண்டும் கருத்தரித்துவிட்டால் தம்பதிகள் கருக்கலைப்பு செய்வதுண்டு.

ஆனால், சிலர் பாலினம் கருதி, ஆண், பெண் வேறுபாடு கருதி கருக்கலைப்பு செய்வது, திருமணத்திற்கு முன்னர், அல்லது தகாத உறவு வைத்து கருக்கலைப்பு செய்வதும் தான் உலகம் முழுவதும் நடக்கும் பெரும்பாலான கருக்கலைப்பிற்கு காரணமாக இருக்கிறது.

கருக்கலைப்பு என்பது ஓர் செயலாக அன்றி, மனிதம் சார்ந்த பார்க்கையில் அது ஓர் சிசுவின் எதிர்காலம், விலைமதிப்பற்ற உயிர் என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது கூட சரியானது தான்.

இனி, கருக்கலைப்பு சார்ந்த சில உண்மைகள் குறித்து பார்க்கலாம்…

உண்மை #1

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 1.2 மில்லியன் பெண்கள் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்.

உண்மை #2

கருக்கலைப்பு செய்து நலமுடன் இருபவர்களில் 51% பேர், கருக்கலைப்பை அதிகாரப்பூர்வமாக சட்டம் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உண்மை #3

நியூயார்க் நகரின் கருத்தரிக்கும் பெண்களில் 37% பேர் கருக்கலைப்பு செய்துக் கொள்கின்றனர்.

உண்மை #4

ஒவ்வொரு வருடமும் பெண் குழந்தை என தெரிந்த பிறகு ஒரு மில்லியன் சிசுக்கள் கருக்கலைப்பு செய்யப்படுகின்றன.

உண்மை #5

சீனாவில் பத்தாயிரத்திற்கும் மேலான பெண் குழந்தைகள் பிறந்த பிறகு அனாதையாக தவிக்கவிடப்படுகின்றனர். இதற்கு காரணம் சீன அரசின் ஒரு குழந்தை திட்டம் என கூறப்படுகிறது.

உண்மை #6

இந்தியாவில் ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை பெண் குழந்தை என அறிந்த பிறகு கருக்கலைப்பு செய்யப்படுகிறது. பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வது ஸ்வீடனில் பெரும் குற்றமாகும்.

உண்மை #7

பதின் வயது பெண்களைவிட இருபது வயதை கடந்த பெண்கள் தான் அதிகம் கருக்கலைப்பு செய்கிறன்றனர். மேலும், கருக்கலைப்பு செய்யும் பத்தில் ஆறு பேர் ஏற்கனவே குழந்தை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #8

கருக்கலைப்பு செய்யும் பதின் வயது பெண்களில் 40% பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர் என்பது அவர்களது பெற்றோர்களுக்கே தெரியாது.

உண்மை #9

ஒவ்வொரு வருடமும் கருக்கலைப்பு செய்ததால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 70,000.

உண்மை #10

உலகில் நான்கில் ஒரு கருத்தரிப்பு நிகழ்வு கருக்கலைப்பில் தான் முடிகிறது. இவற்றில் பாதியளவு சட்டவிரோதமாக செய்யப்படுகிறது.

Related posts

அவசியம் படிக்க.. கர்ப்ப கால மூலநோய் – தவிர்க்கும் வழிமுறைகள்

nathan

இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? – காரணங்களும்… தீர்வுகளும்..

nathan

தனிமை விரும்பியா நீங்கள்?

nathan

லவங்கபட்டையின் மருத்துவ பயன்கள்! மூலிகை மந்திரம்!!

nathan

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

nathan

உங்களுக்கு தேமலை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்கள் கவனத்துக்கு மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு பதிவு..

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்னையை விரட்ட வேண்டுமா? இதை மட்டும் இனி செய்யுங்க

nathan